பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலிஇலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம், அம்பலாந்தோட்டை கொகேகல லய்ம பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த வீதியூடாகப் பயணித்த லொறி ஒன்றை பொலிஸார்  சோதனைச் சாவடியில் இடைமறித்துள்ளனர்.
எனினும் லொறி சாரதி லொறியினை நிறுத்தாது சென்ற நிலையிலேயே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments