Comments System

header ads

மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீமின் இணைப்பாளர் ALM பாரூக் வாழைச்சேனைக்கான மு.கா வின் வேட்பாளராகிறார் ?


கோறளைப்பற்று பிரதேச சபைக்கான எதிர்வரும் உள்ளுராட்ச்சி தேர்தலில் முஸ்லீம் காங்கிரசின் சார்பில் வாழைச்சேனை 5 ம் வட்டாரத்திற்கான வேட்பாளராக ஜனாப் ALM பாருக் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்பாளராகவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் நீண்ட கால போராளியான ஜனாப். பாருக் அவர்கள் தேர்தலொன்றுக்கு முகங் கொடுப்பதற்கான மக்கள் செல்வாக்கும் இணைக்கும் ஆற்றலும் அமைய பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் தொடக்கம் மு.கா வின் அரசியலில் கல்குடா சார்பாக முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்டு வரும் இவரின் தேர்தல் பிரவேசம் குறித்து பிரதேச போராளிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைவதுடன் இவரின் வெற்றிக்காக  பாடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

கல்குடா தொகுதியில் உள்ளுராட்ச்சி தேர்தலை முன்னிட்டு பல அரசியல் அதிர்வுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள நிலையில் ஆளுமை மிக்கவர்கள் களமிறங்குவது கட்சிக்கு சாதகமாக அமையும் என்பதில் மாற்றுக கருத்துக்கு இடமில்லை 

Post a Comment

0 Comments