Comments System

header ads

தேங்காயின் விலை குறைப்பு ; ஜனாதிபதி அதிரடி



மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு தேங்காய் 100 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்திடம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள தேங்காய் தொகையினை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு தேங்காயை 65 ரூபா என்ற விலையில் சந்தையில் வெளியிடவுள்ளாக தென்னை பயிர்ச்செய்கை சபை தலைவர் கபிர யகன்தாவல தெரிவித்துள்ளார்.
சிறியளவிலான தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தேங்காய் தொகைகளே சந்தைகளில் வெளியிடப்படவுள்ளது.
நடமாடும் வாகனங்கள் மூலம் இந்த தேங்காய்கள் மக்களிடம் விற்பனை செய்யப்படவுள்ளது.
அதற்கமை இன்று முதல் குறைந்த விலையில் தேங்காய் கொள்வனவு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியினால் தேங்காய் 80 – 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஜனாதிபதி குறைந்த விலையில் தேங்காயை விற்பனை செய்யுமாறும் உத்தரவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமகால இலங்கையின் அரசியலில் தேங்காயின் விலையேற்றம் பல மேடைகளில் பேசும் விடயமாக மாறியுள்ளதுடன், அது ஆட்சியை மாற்றியமைக்கவும் வழி செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போதுள்ள தீவிர தன்மையை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments