Breaking News

ஒலுவில் மதீனாவில் சிறுவர் தின நிகழ்வுகள்



ஒலுவில் அல் மதீனா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று வித்தியாலய முன்றலில் அதிபர் KL அமீர்  தலைமையில் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் பிரதம  அதிதியாக மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி அல்ஹாஜ் MAA . வஸீர்டீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் PT ஜமால்தீன் அவர்களும் கலந்து கொண்டனர். 



மாணவர்களின் ஊர்வலம் மற்றும் காலை நிகழ்வுகளை பெரிதும் ஊக்குவித்த பெற்றோர், எமது பிரதேசத்தில் இவ்வாறான மாணவர் சிறுவர் மேம்படுத்துகை நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். பெற்றோர் மற்றும் கல்விச் சமூகத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்நிகழ்வுகள் சிறப்பாக அமைந்திருந்தன. 

அத்துடன் நிகழ்வுகளில் கலந்து சுகாதார  பிரதி அமைச்சரின் இணைப்பாளர் AC . ரிஷாட் மாணவர்களுக்கான அன்பளிப்புகளை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. 


No comments