Comments System

header ads

பிரதி அமைச்சர் ஹரீஸ் களத்தில்; சாய்ந்தமருது மக்கள் பணிமனை துஆப் பிரார்த்தனையுடன் திறந்து வைப்பு





(அகமட் எஸ். முகைடீன்) 

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸின் சாய்ந்தமருதுக்கான புதிய மக்கள் பணிமனை இன்று (01) ஞாயிற்றுக்கிழமை காலை துஆப் பிரார்த்தனையுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.ஏ. மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, சாய்ந்தமருது உலமா சபைத் தலைவர் மௌலவி யூ.எல்.எம். காசிம், சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் செயலாளர் ஏ. மஜீத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பொருளாளர் யஹியாகான், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. நசார்தீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சிப் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது விஷேட துஆப் பிரார்த்தனை மௌலவி ஐ.எல். அஹமட் (ஷர்கி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் சாய்ந்தமருதுக்கான இப்புதிய மக்கள் பணிமனையானது சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகமானது கடந்த காலங்களில் பிரதி அமைச்சரின் சாய்ந்தமருது இல்லத்தில் இயங்கிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.   

Post a Comment

0 Comments