Comments System

header ads

வட்டார எல்லை நிர்ணய குழுவில் முஸ்லீம் ஒருவர், தலைவர் ஹக்கீமின் முயறசிக்கு வெற்றி - ஏ.எல் . தவம் மு. மா.ச.உ




ஊடகத் திரிபுபடுத்தலும் போலிப் பரப்புரையும்..............

புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல், வட்டார நிர்ணய விவகாரத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகக் கையாள நியமிக்கப்படவுள்ள குழுவில் 4 சிங்களவர்களும் 1 தமிழரும் மாத்திரமே உள்ளடங்கியதாக கடந்த அமைச்சரவைக்கு முந்திய அமைச்சரவையில் அமைச்சர் பைசல் முஸ்தபாவால் வேறு யாரிடமும் கலந்து ஆலோசிக்கப்படாமல் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் " முஸ்லிம்களும் - மலையக மக்களுமே இவ்விடயத்தில் அதிக சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளது. இந்நிலையில் முஸ்லிம் பிரதிநிதி உள்ளடக்கப்படாமை ஏற்றுக்கொள்ள முடியாது" எனக்கூறி அமைச்சரவைத் தீர்மானம் எடுப்பதைத் தடுத்தார். 

அதன் பிறகு, கடந்த அமைச்சரவையில் பைசல் முஸ்தபாவால் மீண்டும் முஸ்லிம் பிரதிநிதி உள்வாங்கப்பட்டு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வாறு உள்வாங்கப்பட்டிருந்தவர் அமைச்சர் றிசாட் பதீயுதீனின் கட்சியின் பிரதேச அமைப்பாளரான ஒருவராகும். 

இதனை அவதானித்த தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் "பொதுவான விடயத்தில் குறிப்பிட்ட கட்சி ஒன்றின் பிரதிநிதி உள்வாங்கப்படக் கூடாதெனவும், அது ஒரு கட்சி சார்ந்த நலன்களைப் பாதுகாக்க உதவுமே தவிர, சமூக நலன்களை நிறுவுவதற்காக அல்ல" எனவும் கூறினார். 

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், பொதுவான ஒருவரை நியமிக்குமாறு பணிப்புரை விடுத்தார். அதன் பிரகாரம், அரசியல் கட்சிகள் சாராத புதிய முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். 

தமது கட்சியின் நலன்களை மட்டும் நிலைநிறுத்த றிசாட்டினால் மேற்கொள்ளப்பட்ட சதி றஊப் ஹக்கீமினால் முறியடிக்கப்பட்டதை பொறுக்காமல், இன்று (05.10.2017) ஊடகங்களுடாக போலிப் பிரச்சாரத்தையும் அவதூறையும் பரப்பியுள்ளனர். 


Post a Comment

0 Comments