ஓவியாவுடன் ஜோடியாக தயார் ; ஆரவ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 1, 2017

ஓவியாவுடன் ஜோடியாக தயார் ; ஆரவ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்பிக்பாஸ் நிகழ்ச்சி பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அதில் மிக முக்கியமானவர் ஆரவ். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் மாடலிங்கில் புகுந்து பின்னர் சைத்தான் படத்தில் சின்ன ரோலில் நடித்தார்.
கலந்து கொண்டவர்களில் மக்களுக்கு பரிட்சயப்படாத முகமாயிருந்த இவர் தற்போது அனைவரின் மனதையும் வென்று டைட்டில் வின்னராக மாறி 50 லட்சம் ரூபாயை வென்று விட்டார்.
இதுபற்றி இவர் பேசுகையில், ஜெயிப்பேன் என்று நினைக்கவில்லை. சினேகன், கணேஷ் இருவரில் யாராவது ஒருவர் ஜெயிப்பார்கள் என்று தான் நினைத்தேன்.
எந்த வியூகத்துடனுடனும் விளையாடவில்லை. என்னை உலகிற்கு வெளிப்படுத்திக்கொள்ள இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று தான் வந்தேன்.
நல்ல கதை அமைந்தால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கூட ரெடியாக இருக்கிறேன்.
ஓவியா பற்றி பேசும் போது, அவர் என் மீது விருப்பம் வைத்துள்ளார் எனக்கு தெரியும், ஆனால் இது ஒத்துவராது என்பதால் தவிர்த்தேன். அவரும் குழப்பமான மனநிலையில் இருந்தார்.
ஒவியாவுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பீ்ர்களா என்ற கேள்விக்கு, நிச்சயம் தயாராக இருக்கிறேன். இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்கள் தான். ஜெயித்ததற்கு நன்றி கூறினார். ரசிகர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்க விருப்பப்பட்டால் நான் தயார் தான் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here