மக்களுடன் பிரதியமைச்சர் ஹரீஸ் ; சர்வதேச சிறுவர் தின நிகழ்வு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 1, 2017

மக்களுடன் பிரதியமைச்சர் ஹரீஸ் ; சர்வதேச சிறுவர் தின நிகழ்வு



(அகமட் எஸ். முகைடீன்)

எஹியாகான் பவுண்டேசன் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு அவ்வமைப்பின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சி. எஹியாகான் தலைமையில் சாய்ந்தமருது எஹியாக்கான் பவுண்டேசன் அலுவலகத்தில் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, எஹியாகான் பவுண்டேசன் ஆலோசகரும் ஜி.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தின் அதிபருமான யு.எல். நசார் உள்ளிட்ட எஹியாகான் பவுண்டேசன் நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள், சிறுவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.    

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages