கிழக்கு முஸ்லீம்கள் முதலமைச்சை இழந்துள்ளமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடும் அக்கரைப்பற்று முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 30, 2017

கிழக்கு முஸ்லீம்கள் முதலமைச்சை இழந்துள்ளமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடும் அக்கரைப்பற்று முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள்



அஸாம் அக்கரைபற்று

"தனியே மாகாண சபை உறுப்புரிமை மாத்திரம் கொண்டு ஆளுமையாக செயல்பட்ட  தவத்தின்  பண்பாடு மற்றும் நடவடிக்கைகள்  அக்கரைப்பற்று முன்னாள் அமைச்சரையும் ஆதரவாளர்களையும் திக்குமுக்காட வைத்துள்ளது."

அக்கரைப்பற்றில் கிழக்கு மாகாண சபை கலைந்ததை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்கள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையான முஸ்லீம்களை பிரதிநிதித்துவப் படுத்துதும் கட்சியான முஸ்லீம் காங்கிரசின் கைகளில் முதலமைச்சு பதவி உட்பட மாகாண அதிகாரங்கள் இருந்த நிலையில் மாகாண சபை கலைந்துள்ளமையை கொண்டு மகிழ்வுறவே இவ்வாறன நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

கடந்த காலங்களில் பிள்ளையான் மற்றும் நஜீப் எ. மஜீத் ஆகியோருக்கு மகிந்த அரசு முதலமைச்சு வழங்க காரணமாக அமைந்த அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களே இவ்வாறன சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் பிள்ளையான் அல்லது சிங்கள பிரமுகர் ஒருவரை முதலமைச்சராக்கும் திரைமறைப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முஸ்லீம்களுக்கு கிடைத்த முதலமைச்சுப் பதவியை சமூகம் இழந்துள்ள நிலையில் அதனை பட்டாசு கொளுத்தி கொண்டாடும் கயமைக்குரியவர்கள் யார் என்ற கேள்வி அக்கரைப்பற்று சமூக ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளமையும் கண்கூடானதாகும்.

எது எவ்வாறாக இருப்பினும் "தனியே மாகாண சபை உறுப்புரிமை மாத்திரம் கொண்டு ஆளுமையாக செயல்பட்ட  தவத்தின்  தலைமைத்துவ ஆளுமை அக்கரைப்பற்று முன்னாள் அமைச்சரையும் ஆதரவாளர்களையும் திக்குமுக்காட வைத்துள்ளது." என்பது அக்கரைப்பற்று சமூகத்தவரின் உறுதியான நிலைப்பாடாகும். 


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages