Header Ads

Breaking News

மாட்டினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் - செக் வைத்தார் சீ.வீ.கே சிவஞானம்



முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதும் அடுத்த அமர்வில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதன்போதே அவைத்தலைவர் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.
5 அமைச்சுக்கள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட பிரேரணையே சில திருத்தங்களுடன் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.
எனினும் குறித்த பிரேரணையை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வடமாகாண முதலமைச்சர் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சர் எழுந்து “அது எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது என்று நினைக்கின்றேன். உங்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அவைத்தலைவர், “அடுத்த அமர்வில் திருத்தங்களுடன் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன்போது நீங்கள் இந்த விடயத்தை தெரிவியுங்கள். பின்னர் சபை தீர்மானிக்கட்டும்” என கூறியுள்ளார்.

No comments