Header Ads

Breaking News

அதிகாரங்கள் இல்லாத யாப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளுமா ?



இலங்கை அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்ற புதிய அரசியல் யாப்புப் பற்றிய மிகப் பெரிய எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகின்றது.
புதிய அரசியல் யாப்பு பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படியான பேச்சுக்களைத்தான் சம்பந்தர், சுமந்திரன் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரமுகர்கள் தொடர்ந்து பேசி வருகின்றார்கள்.
இந்த நிலையில் மாகாணசபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது என்ற பௌத்த பிக்குகளின் கோரிக்கைக்கு, சிறிலங்கா அரச தலைவர் மைத்திரியும் உடன்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்று மைத்திரி பௌத்த பிக்குகளுக்கு உறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருந்து எழுந்துள்ளது.
தமிழ் மக்களின் பல தசாப்த காலப் போராட்டம், இழப்புக்கள் போன்றனவற்றின் பலனாகக் கிடைப்பதுதான் இந்த அரசியல் யாப்பு என்கின்ற வகையில்தான் பிரச்சாரங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணி பொலிஸ் அதிகாரங்கள் கூட இல்லாமல் 13வது திருத்தச்சட்டத்தை விடக் குறைவான அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் அந்த அரசியல் யாப்பு வரும் என்றாகிவிட்ட தற்போதைய நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படி அந்த அரசியல் யாப்பை அணுகப்போகின்றது என்கின்ற கேள்வி தமிழ் மக்களால் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.

No comments