அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டம் மேம்படுத்தப்படவேண்டும் - ஏ.எல் தவம் (தலைவர்- அக்கரைப்பற்று உதைபந்து லீக் ) - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 4, 2017

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டம் மேம்படுத்தப்படவேண்டும் - ஏ.எல் தவம் (தலைவர்- அக்கரைப்பற்று உதைபந்து லீக் )ஏ.எல்.றமீஸ்
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 2017 ஆண்டு தொடக்கம் 2021 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத்தின் பொதுச் செயலாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த யு.எல்.ஜெஸ்பர் மற்றும் உபதலைவராக என்.ரீ.பாறுாக் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டது.வரலாற்று சாதனையென அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 2017 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு அனைத்துலக மற்றும் ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. 


உலகம் புராவும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இவ் நிருவாக சபைத் தெரிவில்
அனுர டி சில்வா ரஞ்சித் றொட்றிகோ ஆகியோர் தலைமைத்துவத்துக்கு போட்டியிட்டனர். இதில் யார் வெற்றி பெறுவர் என்ற பலத்த போட்டி நிலவியது.63 உதைப்பந்தாட்ட லீக்குகளின் பிரதிநிதிகள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

குறிப்பாக வடக்கில் 09 லீக்கும் கிழக்கில் உள்ள 08 லீக்கும் சேர்ந்து மொத்தமாக 17 லீக்குகளும் ஒற்றுமைப்பட்டதன் மூலம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தகுதியான பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடிந்தது நமது வெற்றியே ஆகும்.

அந்த வகையில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரண்டு சாதனையாளர்கள் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உயர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டது இதுவே முதன் முறையாகும்.

செயலாளர் யு.எல்.ஜெஸ்பர்,உப தலைவர் என்.ரி.பாறுக் ஆகியோருக்கு அக்கரைப்பற்று மண் சார்பாகவும் அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக் சார்பாகவும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மாகாண சபை உறுப்பினரும் லீக்கின் தலைவருமா ஏ.எல்.தவம் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages