ஜனாதிபதி என்னிடம் இருந்து அமைச்சைப் பொறுப்பேற்க விரும்பினால் எனக்கு ஆட்சேபனையில்லை - அமைச்சர் சாகல - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 7, 2017

ஜனாதிபதி என்னிடம் இருந்து அமைச்சைப் பொறுப்பேற்க விரும்பினால் எனக்கு ஆட்சேபனையில்லை - அமைச்சர் சாகல



அழுத்­தங்கள் இன்றி நான் சுயா­தீ­ன­மா­கவே சட்டம் ஒழுங்கு அமைச்சின் கட­மை­களை முன்­னெ­டுக்­கின்றேன். ஜனா­தி­பதி என்­னிடம் இருந்து அமைச்சைப் பொறுப்­பேற்று வேறு அமைச்சுப் பொறுப்பில் என்னை கடமை செய்­யு­மாறு பணிப்­பா­ரானால் அது தொடர்பில் எனக்கு ஆட்­சே­பணை இல்லை. அந்த அமைச்­சிலும் இதே போன்று சிறப்­பாக சேவை­களை முன்­னெ­டுப்பேன் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்தார்.
அலரி மாளி­கையில் நேற்று நடைபெற்ற சார்க் நாடு­களின் சட்டம் ஒழுங்கு அமைச்­சர்­களின் கூட்டம் தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் ஊடக்­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொன்டு ஊடக்­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.
ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போது பொலி­ஸாரின் நட­வ­டிக்கை தொடர்பில் கார­சா­ர­மாக விமர்­சித்­தி­ருந்தார். குரிப்­பாக ஊழல் ஒழிப்பு தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணைகள் சரி­யாக இடம்­பெ­ற­வில்லை என ஜனா­தி­பதி குற்றம் சுமத்தி இருந்­த­துடன் பொலிஸ் தினைக்­க­ளத்தை மூன்று மாதத்­துக்கு தன்­னிடம் ஒப்­ப­டைத்தால் குற்ற­வா­ளிகள் அனை­வ­ரையும் கைது செய்து காட்­டு­வ­தா­கவும் கூறி­யி­ருந்தார்.
இது தொடர்பில் கேட்ட போதே இந்த பதிலை அளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, அது தொடர்பில் மேல­திக கேள்­வி­களை கேட்க முற்­பட்ட போது அதி­லி­ருந்து நழுவி பிறிதொரு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்வதாகவும் அதில் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் கூறிவிட்டு சென்ரார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages