திருகோவில் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தல் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 8, 2017

திருகோவில் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தல்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முயற்சியின் பிரகாரமும், வேண்டுகோளையும் ஏற்று மத்திய சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் சுற்றறிக்கை இல-01-01/2017 இன் பிரகாரம் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட திருக்கோவில் வைத்தியசாலையை மக்களின் கையளிக்கும் நிகழ்வும், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று (08) வைத்திய அத்தியட்சகர் மோகனகாந்தன் தலைமையில் இடம்பெற்றது. 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக பலமுறை மத்தியரசுக்கு கொடுக்கப்பட்ட வேண்டுகோளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவர்களின் வேண்டுகோளையும் ஏற்று இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டது. 

இவ்வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்காக பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் இம்முறை இலங்கையில் இவ்வைத்தியசாலையும் எஹெலியகொட வைத்தியசாலையுமே தரமுயர்த்தப்பட்டது. 

ஆகவே இதனை தரமுயர்த்துவதற்காக உதவியோருக்கு கெளரவமும் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில், குறித்த வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட அவசர சிகிச்சைப்பிரிவு திறந்து வைக்கப்பட்டதுடன், புதிதாக அமைக்கப்படவுள்ள சத்திர சிகிச்சைக்கூடம் மற்றும் இரத்த வங்கி கட்டிடத்திற்கான அடிக்கலும் நடப்பட்டதுடன் வைத்தியசாலைக்கு தேவையான கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வுக்கு பிரதம அத்தியாக பிரதிய சுகாதார அமைச்சர் பைஷால் காசீம் கலந்துகொண்டார். 

கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நஸீர், பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன், கலையரசன், கிழக்கு மாகாண சுகாதாரப் சேவைகள் பணிப்பாளர் முருகானந்தன், உதவிச்செயலாளர் உசைனுடீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அலாவுத்தீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கல்ந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages