மஹிந்த பற்றிய பிழையான கருத்துக்கள் நேற்று ஹன்சாட்டில் இருந்து அகற்றப்பட்டன - விஜயகலா மகேஸ்வரன் ஆவேசம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 6, 2017

மஹிந்த பற்றிய பிழையான கருத்துக்கள் நேற்று ஹன்சாட்டில் இருந்து அகற்றப்பட்டன - விஜயகலா மகேஸ்வரன் ஆவேசம்



சிறுவர் விவ­கா­ரங்­க­ளுக்­கான இரா­ஜாங்க அமைச் சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் முன்னாள் ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தொடர்­பாக வௌியிட்ட கருத்­தாலும் அதனை வாபஸ்­பெற மறுத்­த­மை­யாலும் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுடன் கடும் சர்ச்சை நிலைமை உரு­வா­னது.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை கடற்­தொழில் நீர்வாழ் உயி­ரின வளங்கள் திருத்த சட்­ட­மூலம் மற்றும் வணிக கப்பற் தொழில் சட்­டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவா­வ­தத்தில் கலந்து கொண்ட சிறுவர் விவ­கா­ரங்­க­ளுக்­கான இரா­ஜங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் உரை­யாற்ற முற்­பட்­ட­போது கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் ஒழுங்­குப்­பி­ரச்­சி­னை­களை எழுப்பி குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­னார்கள்.
இதனால் தனது உரையைத் தொட­ர­மு­டி­யாது சுமார் ஐந்து நிமி­டங்­க­ளுக்கு அதி­க­மாக ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்து நின்­ற­வாறே இருந்தார். அச்­ச­ம­யங்­களில் தனது உரையைத் தெடர்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கு­மாறு தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் கோரி­ய­வாறு இருந்தார்.
இச்­ச­ம­யத்தில் சபைக்கு தலை­மை­தாங்­கிய திலங்க சும­தி­பால இரா­ஜங்க அமைச்சர் விஜ­ய­க­லா­ம­கேஸ்­வ­ரனை பார்த்து நீங்கள் தமிழில் உரை­யாற்­றுங்கள். சபை அமை­தி­யா­கி­வடும். என்று கூறினார். இச்­ச­ம­யத்தில் உரையை தொட­ருங்கள் என்று சுமந்­திரன் எம்.பியும் சைகையால் காட்­டி­விட்டு சபையை விட்டு வௌியே­றினார்.
இத­னை­ய­டுத்து சபை­நி­லை­மைகள் கட்­டுப்­பாட்­டிற்குள் வந்­த­தை­ய­டுத்து வடக்கு மீன­வர்கள், அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள், தொடர்பில் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருந்­தவர் இர­ணை­தீவில் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான பகு­தி­களை விடு­விக்க வேண்­டு­மென கடந்த அர­சாங்­கத்­திடம் கோரினேன். முன்னாள் ஜனா­தி­ப­தியும் இங்கு இருக்­கின்றார்.
ஆனால் அவர் எத­னையும் செய்­ய­வில்லை எனக் கூறி அவர் மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டொன்றை முன்­வைத்து தனது உரையை நிறைவு செய்­தி­ருந்தார்.
இச்­ச­ம­யத்தில் ஒழுங்­குப்­பி­ரச்­சி­னையை எழுப்­பி­ய­வாறு எழுந்த கூட்டு எதிர்க்­கட்சி எம்.பியான காஞ்­சன விஜ­ய­சே­கர, இரா­ஜங்க அமைச்சர் தனது குற்­றச்­சாட்­டிற்­கான ஆத­ரங்கள், எண்­ணிக்­கை­களை வௌியிட வேண்டும். இல்­லையேல் தனது கருத்தை வாபஸ் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். அல்­லது அந்த விட­யங்­களை கன்­சார்ட்­டி­லி­ருந்து நீக்­கு­வ­தற்­கான பரிந்­து­ரையை செய்­கின்றேன் என்றார்.
இத­னை­ய­டுத்து பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால, இரா­ஜங்க அமைச்­சர்ரே நீங்கள் பதில் கூறுங்கள் என்றார்
ஆச்­ச­ம­யத்தில் எழுந்த இரா­ஜங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், உங்­க­ளுக்கு பதில் கூற­வேண்­டிய அவ­சியம் எனக்கு இல்லை. மக்கள் உண்­மை­களை அறிந்­துள்­ளார்கள். எங்­க­ளையும் மக்­களே ஆணை வழங்கி அனுப்பி வைத்­துள்­ளார்கள் என்று கூறி­விட்டு கருத்தை வாபஸ்­பெற முடி­யாது எனக் கூறி அமர்ந்து விட்டார்.
இத­னை­ய­டுத்து இரா­ஜங்க அமைச்­சரின் கருத்­துக்­களை மொழிபெயர்த்து சிங்கள மொழியில் கூறுங்கள் என கூறியனார் காஞ்சன எம்.பி. அவர் பதிலளிக்காத நிலையில் அக்கருத்துக்களை கன்சாட்டிலிருந்து நீக்குங்கள் என்று கோரினார்.
அதற்கமைய அக்கருத்துகள் கன்சாட்டிலிருந்து நீக்கப்படுவதாக பிரதிசாபாநாயகர் திலங்க சுமாதிபால அறிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages