ஹசனலியின் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது - கூட்டமைப்பு சிக்கலாகுமா ? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 6, 2017

ஹசனலியின் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது - கூட்டமைப்பு சிக்கலாகுமா ?எஸ்.எல்.பாரீஸ்

ரவுப் ஹக்கீமையும் முஸ்லிம் காங்கிரஸையும் தோற்கடிப்பதற்கு முயற்சி செய்யும் அரசியல் வாதிகள் ஒன்று சேர்ந்து தமக்குள்ளே ஒரு கூட்டமைப்பை உறுவாக்க வேண்டுமென்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ரணிலின் பக்கம் சாயமாட்டார்இஅமைச்சர் ரிஷாட் வெற்றிலையின் பக்கம் சாயமாட்டார். ஹஸனலி தரப்புக்கு எந்தப் பக்கம் என்றாலும் ஹக்கீமை தோற்கடிக்க வேண்டுமென்ற கொள்கை அமைச்சர் ஹிஸ்புல்லா மைத்திரயை விட்டு விலக முடியாது என ஏகப்பட்ட தனிநபர் நிகழ்ச்சி நிரலைக் கொண்ட இவர்கள் முஸ்லிம் கூட்டமைப்புக்கான பேச்சு வார்த்தையில் ஈடபட்டு வருகின்றனர்.

முஸ்லிம் கூட்டமைப்புக்கு ஹஸனலியை தலைவராகவும்இசெயலாளராக பஷீர் சேகு தாவுத்தை நியமிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட்இமுன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஆகியோர் ஆலோசகர்களாக இருப்பார்கள் என ஆலோசனை முன் வைக்கப்பட்ட போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சகல விட்டுக் கொடுப்புடன் ஏற்றுக் கொண்டதுடன் பிரதியமைச்சர் அமிரலிக்கு கட்சியில் முக்கிய பதிவி வழங்க வேண்டுமென்றும் கூறப்பட்டது..

இதற்கிடையில் எம்.ரி.ஹஸனலி பஷீர் சேகு தாவுத் நஸார் ஹாஜி ஆகியோர்
அக்கரைப்பற்றில் அமைந்துள்ள கிழக்கு வாசல் வீட்டில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை சந்தித்து முஸ்லிம் கூட்டமைப்பின் செயற்பாடு தொடர்பாக பேசியுள்ளனர். .முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவராக ஹஸனலியையும் செயலாளராக பஷீரையும் நியமிப்பதற்கு அமைச்சர் ரிஷாட் ஏற்றுக் கொண்ட செய்தியையும் சென்ற குழு அதாஉல்லாவிடம கூறினர்.

இதற்கு உடன்படாத அதாஉல்லா ஹஸனலியை தலைவராக நியமிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன இதற்கு பதிலாக நான்கு பேர் கொண்ட தலைமைத்துவ சபையை ஏற்படுத்துவதே சரியானது என்றார்.

அதாஉல்லாவை சந்திக்க சென்ற குழு மீண்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து இறுதித் தீர்மானம் எடுப்பதாக கூறிவிட்டு சென்றனர்.

இதற்கிடையில் ஹஸனலி தரப்பின் முக்கியஸ்தர் கருத்து தெரிவிக்கையில் ஹஸனலியின் தலைமையேற்று அதாஉல்லா எம்மோடு இணைந்தால் அவருக்கு நல்லது இல்லையென்றால் அதாஉல்லா என்ற நாமமே அரசியல் தளத்தில் இருக்காது என தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages