பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் - அரசை எச்சரிக்கும் அர்ஜுனா - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 6, 2017

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் - அரசை எச்சரிக்கும் அர்ஜுனா



பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை குறைந்தால் தான் அர­சாங்­கத்தில் இருக்கப் போவ­தில்லை என அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.
களுத்­து­றையில் நேற்று நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.
அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
இன்று வரையில் அர­சியல் சாசனம் குறித்த எந்­த­வொரு ஆவ­ணமும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அர­சியல் சாசனம் பற்றி பேசுவோர் இந்த ஆவ­ணங்­களை கண்­டி­ருக்­கின்­றார்­களா ? கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பலரும் ஊட­கங்­க­ளுக்கு சென்று தீயை மூட்­டி­வி­டவே விரும்­பு­கின்­றார்கள்.
இவ்­வாறு செய்­வதன் மூலம் மறுநாள் பத்­தி­ரி­கையில் அரை பக்­கத்­திற்கு புகைப்­ப­டத்­துடன் செய்தி வெளி­யி­டப்­படும். இவ்­வா­றான இழி­வான அர­சி­யலில் ஈடு­ப­டு­வது அரு­வ­ருக்கத் தக்­கது.
பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­துடன், ஏனைய மதங்­க­ளுக்கும் உரி­மை­களை வழங்க வேண்டும். அதில் தவறு எத­னையும் நான் காண­வில்லை.
அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலை­வர்கள் பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை குறைக்­கு­மாறு கோர­வில்லை. நாட்டை வெள்­ளைக்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து மீட்ட போது சிங்­கள பௌத்­தர்கள் மட்டும் போரா­ட­வில்லை. தமிழ், முஸ்­லிம்­களும் போரா­டி­யி­ருந்­தனர்.
பௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறைக்கப்பட்டால் அந்த அரசாங்கத்தில் தான் ஒருபோதும் நீடிக்கப் போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here