நாம் எதற்கும் தயார் - கட்டார் உறுதி அறிவிப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 5, 2017

நாம் எதற்கும் தயார் - கட்டார் உறுதி அறிவிப்புகட்டார் நெருக்கடி தொடர்பில் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளால் வழங்கப்பட்ட நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கை நடைமுறைக்கு சாத்தியமற்றதொன்று என்று கட்டார் வெளியுறவு அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.
குறித்த நிபந்தனைகள் கட்டாரின் இறையான்மையை பாதிப்பதாகவும், அத்துடன் கட்டாரின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளால் வழங்கப்பட்ட குறித்த உடன்படிக்கையில், எகிப்தில் சகோதரத்துவ கட்சிக்கு வழங்கும் ஆதரவை கட்டார் நிறுத்த வேண்டும், அல் - ஜசீரா தொலைக்காட்சி சேவையை நிறுத்த வேண்டும், ஈரானுடனான தூதரக உறவைக் குறைக்க வேண்டும், மற்றும் கட்டாரில் இயங்கும் துருக்கி இராணுவ முகாமை மூடவேண்டும் என்பன முக்கிய நிபந்தனைகளாக விதிக்கப்பட்டிருந்தன.
கட்டார் பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்து சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரேன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தமது இராஜதந்திர உறவுகள் உட்பட அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டன.
இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட கட்டாரை மீள இணைப்பதற்காக 13 நிபந்தணைகள் அடங்கிய உடன்படிக்கையை குறித்த நாடுகள் வழங்கியிருந்தன.
குறித்த உடன்படிக்கையை ஏற்பதற்கு 10 நாட்கள் அவகாசமளிக்கப்பட்ட போதிலும் கட்டார் எதுவித பதில்களையும் தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து மேலும் இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையிலேயே, கட்டார் வெளியுறவு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages