Header Ads

Breaking News

கட்டார் மீது மீண்டும் வளைகுடா நாடுகள் எச்சரிக்கை - மோதல் வெடிக்கலாம்



வளைகுடா நாடுகளின் கோரிக்கைகளை கட்டார் நிராகரித்துள்ளமையானது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என சவுதி அரேபியா, பங்ரேன், எகிப்து மற்றும் ஐக்கிய அரசு இராஜ்ஜியம் ஆகிய நான்கு அரபு நாடுகளும் எச்சரித்துள்ளன.
பயங்கரவாதிகளுக்கு உதவி புரிவதாக கட்டாருடனான இராஜதந்திர, பொருளாதார மற்றும் போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ள குறித்த நான்கு அரபு நாடுகளும் கட்டாருடனான உறவுகளை புதுப்பிக்கும் எண்ணத்துடன் 13 கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.
குறிப்பாக அல்-ஜசீரா ஊடகத்தினை மூட வேண்டும், ஈரானுடனான தொடர்புகளை குறைக்க வேண்டும் என்றும் வளைகுடா கூட்டுறவு ஒத்துழைப்பு சபையில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கட்டார் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், குறித்த 13 கோரிக்கைகளையும் கட்டார் ஏற்காதுவிடின் அரசியல் பொருளாதாரம் என புதிய தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், வளைகுடா நாடுகளின் கோரிக்கைகள் தமது இறையாண்மையை பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதென கட்டார் நிராகரித்துள்ளது. இந்நிலையில் அரபு நாடுகள் கட்டாருக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

No comments