Header Ads

Breaking News

இலங்கை வரும் ஜ.நா அதிகாரி



ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத முறியடிப்பு விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் இலங்கை வரவுள்ளார்.
எதிர்வரும் 10ம் திகதி இலங்கை வரவுள்ள அவர் 14ம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதனால் மனித உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பிலான முதற்கட்ட தகவல்களை திரட்டும் நோக்கில் அவரது விஜயம் அமையவுள்ளது.
அத்துடன் 'இலங்கையின் தீவிரவாத முறியடிப்பு கொள்கை மற்றும் அதற்கான சட்ட வரையறைகள் குறித்தும், அதற்கான சட்டவரைவுகள் மற்றும் தயார் நிலைகள் குறித்தும் தகவல் திரட்டவிருப்பதாக' பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.
'இந்த விடயங்களில் அரசாங்கம் எந்த அளவில் மனித உரிமை சட்டத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்பது குறித்தும் ஆய்வு நடத்தவிருப்பதாகவும் பென் எமர்சன் குறிப்பிட்டுள்ளார்.

No comments