மேடையில் கச்சான் கொட்டை விற்ற பெரும் தலைவர் அஷ்ரப் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 5, 2017

மேடையில் கச்சான் கொட்டை விற்ற பெரும் தலைவர் அஷ்ரப்இன்று கல்முனை கடற்கரையோரம் நானும் எனது நீண்ட கால நண்பர்களும் நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்துக் கொண்டோம். அங்கே இங்கே என்று அரசியல் பற்றிக் கொண்டது, மற்றைய நண்பர்களும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தவறவில்லை. எம் முன்னே ஒரு சிறு பையன் கச்சான் கொட்டை வேணுமா நானா ? என்று ஒரு சொப்பிங் பேக் கை நீட்டினான். கதையில் இருந்த ஆர்வம் கொஞ்சம் அவசரமாக நானும் எல்லத்துக்கும் எள்ளளவு தம்பி எனக் கேட்க, அவனும் 300 ரூபா நானா என்று சொல்ல, முழுவதையும் வாங்கிக் கொண்டேன். 

எங்களுடனிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர், " மனிதநேயம் மிக்க தலைமையாக நாம் மர்ஹூம் தலைவர் அஷ்ரபை கண்டோம். அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரியில், தென் கிழக்குப் பல்கலைக்கழக வளாகம் இருந்த  ஒரு நாளில் (94/95 களில்) பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் வருகை தந்திருந்தார். 

அந்நாளில் கட்சித் தலைவரின் வருகை என்றால் கட்சியின் எல்லா அதிகார உறுப்பினர்களும் ஒருங்கே கூடிவிடுவார்கள், பிரதேச செயலாளர் அசீஸ் சேர், நசீர் எஞ்சினியர், அதாவுல்லாஹ் சேர், என்று தலைவரின் அருகே பலபேரைக் கொண்ட குழுவொன்று கூடியிருந்தது. அப்போதுதான் பாலமுனை மைதானத்தின் பின்னால் உள்ள முகாமுக்கு தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை அங்குள்ள மக்களுக்காக பொது இடமொன்றில் வைக்க தலைவர் பணித்திருந்தார். அதுபற்றி எல்லோரும் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள்.
அதேநேரம் அங்கு ஒரு சிறுவன் இதே போன்று ஒரு பைக்குள் கச்சான் விற்றுக் கொண்டிருந்தான். 

அவரை அருகே அழைத்தார் தலைவர், இந்தக் கச்சான் கொட்டைகள் அனைத்தையும் எனக்கே தர முடியுமா ? எனக்கேட்டார், அவனும் ஒப்புக்கொண்டான், உடனே மேடைக்கு எழுந்து சென்ற தலைவர், என்னிடம் கச்சான் பைகள் உள்ளது விரும்பியவர்கள் வாங்கிக் கொள்ளாலாம் ஆனால் ஒன்றின் குறைந்த விலை 100 ரூபா, மேலதிகமாய் தர விரும்பியவர்கள் தரலாம் என்றார், சபையில் இருந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கினார்கள். அந்த கச்சான் சிறுவனின் மனதும் கண்களும் பனித்தன. " என சொல்லும் போதே இவரின் குரலும் தழுதழுத்தது. 

மறைந்தும் வாழும் தலைமைக்காக அவ்விடத்தில் மௌனமாக இருந்த அனைவரும் பிரார்த்தித்துக் கொண்டோம். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages