எதிர்கட்சி தலைவருக்கு எதிராக களம் இறங்கிய மட்டு. அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களை இடம்மாற்றினார்! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 8, 2017

எதிர்கட்சி தலைவருக்கு எதிராக களம் இறங்கிய மட்டு. அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களை இடம்மாற்றினார்!எதிர்கட்சி தலைவருக்கு எதிராக களம் இறங்கிய மட்டு. அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களை இடம்மாற்றினார்!
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரைஇடமாற்றம் செய்ய முற்பட்ட எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இரண்டு பிரதேச செயலாளர்களை மட்டு அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது பல்வேறு பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யவேண்டும் என எழுந்துள்ள மக்களின் அழுத்தத்தை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரை சந்தித்து மட்டு அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யுமாறு அன்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளை ஏற்று எதிர்கட்சி தலைவரினால் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக களம் இறங்கிய மட்டு அரசாங்க அதிபர் உடனடியாக கொழும்பிற்கு சென்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் உள்ள அதிகாரி ஒருவரை பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள இரண்டு பிரதேச செயலாளர்களுக்கு முறையற்ற விதத்தில் இடமாற்ற கடிதங்களை அனுப்பி விட்டு தனது இடமாற்றத்தை இரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
காணி அபகரிப்பை எதிர்த்த பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் அத்துமீறிய சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்துவதில் முன்நின்று செயற்பட்டு வரும் பிரதேச செயலாளர்களை இடமாற்றம் வழங்கி பழிவாங்கும் செயற்பாட்டை அரசாங்கஅரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் கொழும்பிற்கு சென்ற அரசாங்க அதிபர் உடனடியாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் உள்ள தனக்கு சார்பாக அதிகாரிகளை பிடித்து காணி அபகரிப்புக்கு எதிராக செயற்பட்ட சில பிரதேச செயலாளர்களை கொழும்பிற்கு இடமாற்றம் செய்துள்ளார். எதிர்கட்சி தலைவர் அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யவேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில்.
அதற்கு எதிராக உடனடியாக செயற்பட்ட அரசாங்க அதிபர் உடனடியாக கொழும்பிற்கு சென்று தன்னுடைய இடமாற்றத்தை இரத்து செய்ததுடன் தனது ஊழல் மோசடிகளை காட்டி கொடுத்த பிரதேச செயலாளர்களை இடமாற்றம் செய்துள்ளார்.
இதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும் துணை போயுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகத்தின் ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அரசாங்க அதிபரின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை இலஞ்ச ஊழல் அணைக்குழு ஆரம்பித்திருக்கும் நிலையில் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு அமைய எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை எடுத்தபோது அதை ஏற்றுக்கொண்டு செல்லாத மாவட்ட அரசாங்க அதிபர் அதற்கு எதிராக செயல்பட்டுள்ளார்.
இது தற்போது மட்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்களுக்கும் இடையிலான மோதலாக எழுந்துள்ளது. ஒரு எதிர்கட்சி தலைவரையே மதிக்காது அவருக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தும் அளவுக்கு இலங்கை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்குள் ஊழல் மலிந்துள்ளது என்பதையே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாடுகள் எடுத்து காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here