புதிய ஆளுனர் ரோஹித பொகொல்லாகமவுடன் இணைந்து செயற்பட கிழக்கு மாகாண சபை தயார் – முதலமைச்சர் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 4, 2017

புதிய ஆளுனர் ரோஹித பொகொல்லாகமவுடன் இணைந்து செயற்பட கிழக்கு மாகாண சபை தயார் – முதலமைச்சர்கிழக்கின் நிரந்தர அபிவிருத்திக்கும் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பவும் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித பொகொல்லாகமவுடன் இணைந்து செயற்பட  கிழக்கு மாகாண சபை தயார் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரு நிர்வாகங்களும் இணைந்து சுமுகமாகவும் ஒற்றுமையாகவும் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கை கட்டியெழுப்புவது இலகுவான விடயம் என்பதில் ஐயமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் வெளிநாட்டு முதலீடுகளுடன் மாகாண சபை முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு புதிய ஆளுனர் மேலும் வலு சேர்ப்பார் என்பதுடன் அவருடன் இணைந்து மென்மேலும் கிழக்கிற்கு பல பயனுள்ள முதலீடுகளைக் கொண்டு வந்து கிழக்கில் தற்போது பிரதான பிரச்சினைகளாகவுள்ள வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நம்முடன் இணைந்து செயற்படுவதற்கும் நாம் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கில் மூவினத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று கிழக்கிலும் இன முறுகலை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயன்று வருகின்ற  சூழ்நிலையில் இன மத பேதங்களுக்கு அப்பால் செயற்பட்ட சிறந்த அரசியல்வாதி என மக்களால் அழைக்கப்படும் ரோஹித போகொல்லாகம ஆளுனராக நியமிக்கப்படுள்ளமை கிழக்கில் மென்மேலும்  இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தயும் வலுப்படுத்த வழிவகுக்கும் என நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காணாமல் போனோர் பிரச்சினை,பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பின்மை மற்றும் யுத்தத்தால்  கணவனை இழந்த பெண்கள்  போன்ற பல தரப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகள்  இதுவரை முழுமையாக கிடைக்கப் பெறவில்லை,எனவே இவர்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க கிழக்கு மாகாண சபை முன்னெடுக்கும் பயணத்தில் புதிய ஆளுனர் எமக்கு உறுதுணையாக இருப்பார் என எதிர்பார்க்கின்றோம் எனவும் கிழக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here