அரசியலமைப்பு (சிறுபான்மைக்கு எதிரானது அதை) ஏன் மகாநாயக்கர்கள் எதிர்க்கிறார்கள் - ராஜித - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 5, 2017

அரசியலமைப்பு (சிறுபான்மைக்கு எதிரானது அதை) ஏன் மகாநாயக்கர்கள் எதிர்க்கிறார்கள் - ராஜிதஅரசமைப்புத் திருத்தத்தை மகாநாயக்க தேரர்கள் எதற்காக எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேரர்கள் இது குறித்து வழங்கும் அறிவுரையை நாடாளுமன்றில் விவாதிக்க தீர்மானித்துள்ளோம். நாட்டின் தலைவரான ஜனாதிபதி தனது அதிகாரத்தை மக்களுக்கும் ஏனைய அமைப்புக்களின் பிரதானிகளுக்கும் வழங்குகிறார். அவர்கள் அதற்கு எதிர்ப்பை வழங்குகின்றனர். இது ஏன் என்று தெரியவில்லை என்று அவர் கூறினார்.
மகாநாயக்க தேரர்கள் அரசமைப்புத் திருத்தம் தேவையில்லை என மனு ஒன்றை தயாரித்து இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் ராஜித இவ்வாறு பதிலளிதார்.
ரக்பி வீரர் வசீம் தாஜுடீனைக் கொன்றவர்கள் யார் எனத் தெரியும். அரசுக்குள் இருக்கும் திருடர்களை பாதுகாப்பவர்கள் யார் என்பது குறித்து எதிர்வரும் நாள“களில் தெரிய வரும் என்றும் அமைச்சர் இதன்போது கூறியிருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here