சற்றுமுன் கட்டாருக்கு எதிராக பாதகமான முடிவுகள்! திடுக்கிடும் நகர்வுகள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 5, 2017

சற்றுமுன் கட்டாருக்கு எதிராக பாதகமான முடிவுகள்! திடுக்கிடும் நகர்வுகள்கூட்டணி நாடுகள் முன்வைத்த நிபந்தனைகளை நிறைவேற்ற மறுத்த கட்டார் மீது மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் முகமாக இன்று சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, மற்றும் பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சர்கள் எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் அமைந்துள்ள தக்ரீத் சதுக்கத்தில் ஒன்று கூடினர்.
எகிப்து நேரம் நண்பகல் ஒரு மணிக்கு கூடிய வெளிநாட்டமைச்சர்களின் கூட்டம் தொடர்ந்து இரண்டு மணிநேரங்கள் நீடித்தது, இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானமாக கல்ப் கோப்ரேஷன் கௌன்சிலில் இருந்து அந்நாட்டை வெளியேற்றி பிராந்தியத்தில் அந்த நாட்டினை தனிமைப்படுத்தும் யோசனை முன்வைக்கப்ட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வளைகுடா நாடுகளின் பொருளதாம், பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்புகள், போன்றவற்றை பாதுகாக்கும் விதமாகவும், முன்னெடுத்து செல்வதற்காகவும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத், பஹ்ரைன், ஓமான் ஆகிய ஆறு நாடுகள் இணைந்து 1981ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே GCC எனப்படும் கல்ப் கோப்ரேஷன் கௌன்சில்.
கடந்த 36 வருடங்களாக கல்ப் கோப்ரேஷன் கௌன்ஸிலின் உதவிகள் ஒத்தாசையுடனேயே கட்டார் தனது பயணத்தை தொடர்ந்து வந்திருக்கின்றது, திடிரென அந்த நாடு இப்போது நீக்கப்பட்டிருப்பதானது அனைத்து வகையிலும் அந்த நாட்டை பாரிய பின்னடைவுக்குள் தள்ள கூடும் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages