இலங்கையர்களுக்கு நீதி தீர்ப்பளிக்கும் அதிகாரம் வெளிநாடுகளின் கையில் - மஹிந்த சீற்றம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 2, 2017

இலங்கையர்களுக்கு நீதி தீர்ப்பளிக்கும் அதிகாரம் வெளிநாடுகளின் கையில் - மஹிந்த சீற்றம்காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிராக சர்வதேச கொள்கையை இலங்கையினுள் பலப்படுத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
திட்டமிடப்பட்டுள்ள புதிய சட்டத்தின் ஊடாக இலங்கையர்களுக்கு எதிராக குற்ற வழக்கு தாக்கல் செய்வதற்கு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
அதற்கமைய இலங்கையினுள் நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எந்த ஒரு நபரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு வெளிநாடு ஒன்றிற்கு இலங்கையிடம் கேட்க முடியும்.
சட்டமூலத்திற்கமைய இலங்கையினுள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிராக சர்வதேசத்தின் கொள்கை முழுமையாக செயற்படுத்துவதற்காக பல்வேறு சட்டங்கள் திட்டமிடுவதற்கு அதிகாரம் கிடைக்கும்
காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தொடர்புடைய கடத்தல், தடுத்து வைத்தல், கொலை செய்தல் மற்றும் சடலங்கள் அழிக்கப்பட்டமை மற்றும் மறைக்கப்பட்டமை போன்ற விடயங்களும் இந்த நாட்டு சட்டங்களில் மூடப்படும்.
இதனால் திட்டமிடப்பட்டுள்ள புதிய சட்டத்தில் வெளிநாட்டு தரப்பினர்களுக்கு இந்த நாட்டு சட்டத்தை செயற்படுத்துவதற்கு இடமளிப்பது மாத்திரமே மேற்கொள்ளப்படும்.
அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா உட்பட நாடுகள் இந்த சர்வதேச கொள்கைகளுக்கு கையொப்பமிடவில்லை.
தமது நாட்டு குடிமக்களின் தனிப்பட்ட உரிமை கடுமையாக மீறப்படுவதற்காக வாய்ப்புகள் உள்ளமையினாலேயே அவ்வாறு அந்த நாடுகள் கையொப்பமிடவில்லை.
புதிய சட்டமூலத்தில் யுத்த குற்றம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளது. அதன் ஊடாக வெளிநாட்டு நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச குற்ற நீதிமன்றங்களில் இராணுவத்தினர் காட்டிகொடுக்கப்படுவார்கள்.
இதன் நோக்கம் காணாமல் போனவர்களை தேடுவது அல்ல. தீவிரவாதிகளை இல்லாமல் செய்த இராணுவத்தினரை வேட்டையாடுவதே இதன் நோக்கமாகும்.
இராணுவத்தில் இருந்து காணாமல் போயுள்ள ஆயிரகணக்கான இராணுவத்தினர் தற்போது வரையில் உயிரிழந்திருப்பதாக கருதப்படுகின்றது.
இதனால் குறித்த சட்டமூலத்தின் கீழ் புலிகள் மாத்திரமே காணாமல் போயுள்ளதாக கருதப்படுகின்றது.
எனவே இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதன் ஊடாக, புலி டயஸ்போராக்கள் மற்றும் வெளிநாட்டு பலம் வாய்ந்தவர்களுக்கு இந்த நாடு காட்டி கொடுக்கப்படும் என்பதனை அனைத்து தரப்பு உறுப்பினர்களும் கருத்திற் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages