எதிர்வரும் மாகணசபை தேர்தலுடன் மூலைக்குள் முடங்கப் போகும் முஸ்லீம் கூட்டமைப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 7, 2017

எதிர்வரும் மாகணசபை தேர்தலுடன் மூலைக்குள் முடங்கப் போகும் முஸ்லீம் கூட்டமைப்பு
ஏ.எல்.றமீஸ்

கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் முடிவுற இருக்கின்றன இத் தருணத்தில் கிழக்கு மாகாணத்தின் மூன்றாவது தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகளும்.அரசியல் வாதிகளும் தயாராகி வருகின்றனர்.

கிழக்கின் இரண்டாவது தேர்தல் 2012ம் ஆண்டு கிழக்குமாகாணசபை கலைக்கப்பட்டு அதே ஆண்டு இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக முதன் முதலில் களமிறங்கியதால் இத்தேர்தல் 2008ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலைவிட முக்கியமான தேர்தலாக பார்க்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் 37 உறுப்பினர்களையும் (இரண்டு போனஸ் உறுப்பினர்களையும்) தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 05 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 04ஆசனங்களையும் திருகோணமலை மாவட்டத்தில் 03ஆசனங்களையும் பெற்றதன் மூலம் மாகாணத்தில் அதி கூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக இரண்டு போனஸ் ஆசனங்களுடன் மொத்தமாக 14 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றது.

. தமிழ்தேசிய கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் 02 ஆசனங்களையும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் 06ஆசனங்களையும் திருகோணமலை மாவட்டத்தில் 03 ஆசனங்களுமாக மொத்தம் 11ஆசனங்களைப்பெற்று இரண்டாவது பெரும்பான்மை கட்சி என்ற ஸ்தானத்தினை பெற்றுக்கொண்டது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் 04ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தினையும் திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் பெற்று மூன்றாவது பெரும்பான்மை என்ற இடத்தினை வகித்தது. மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி 04 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தினையும் பெற்றுக்கொண்டது. 
இத் தேர்தல் முடிவால் எந்த கட்சியும் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாத சுழ்நிலை கிழக்கு மாகாணசபைக்கு ஏற்பட்டது. 

இவ் வேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொண்டு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளும் போட்டி போட்டன. 

இறுதியில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணங்கி சென்றதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸின். ஆட்சி நடவடிக்கைகள் 2015ம் ஆண்டுவரை நீடித்தது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதன் மூலம் மத்திய ஆட்சியில் மட்டுமல்ல மாகாண ஆட்சியிலும் தாக்கத்தை செலுத்தியது.

அந்த வகையில். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்தேசிய கூட்டமைப்பு  ஐக்கிய தேசிய கட்சி  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு   போன்ற கட்சிகளைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தில் கூட்டாட்சியை ஏற்படுத்தினர். இதனால் மாகாணத்தின் முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டார்.

இப்படியான நிலையில் அடுத்த தேர்தலின் களநிலவரத்தை மாற்றக் கூடிய பல மாற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல சங்கடங்களை சந்தித்து கொண்டிருக்கின்றது விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் பேரவையின் அண்மைக் கால செயற்பாடுகள் தமிழரசுக் கட்சியின் தனித்துப் போகும் முடிவு என முக்கிய பிரச்சினையால் கிழக்கு மாகாணத்தின் வாக்கு வங்கியை பாதிக்குமா எனும் கேள்வி எழுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.

கடந்த முறை தனித்து களமிறங்கிய முஸ்லிம் காங்கிரஸ் இம் முறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்பே அதிகம் காணப்படுவதால் கிழக்கின் அதி கூடிய வாக்குகளைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இருந்த போதும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஹஸனலி போன்றோர் முஸ்லிம் கூட்டமைப்பை உறுவாக்கி கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியை செய்து வருகின்றனர்.

முஸ்லிம் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படுமாயின் சிங்கள தமிழ் வாக்குகள் எந்த வகையிலும் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போவதுடன் ஒரு குறிப்பிட்ட கனிசமான முஸ்லிம் வாக்குகளைப் பெற்றாலும் கிழக்கு மாகாணத்தில் நான்கு ஆசனங்களையே இவற்றால் பெற முடியும் கிழக்கின் ஆட்சியில் முஸ்லிம் கூட்டமைப்பு பங்காளியாக வர வேண்டுமென்றால் பெரும் கட்சியுடன் தேர்தல் கூட்டை ஏற்படுத்த வேண்டும்.ஐக்கிய தேசியக் கட்சியோ தமிழ் தேசியக் கட்சியோ முஸ்லிம் கூட்டமைப்பை எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ளமாட்டாது இதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம்.

அத்தோடு முஸ்லிம் கூட்டமைப்புக்கு இருக்கின்ற ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவது.அப்படி போட்டியிடுவதற்கான நிலை ஏற்பட்டால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் கூட்டமைப்பிலிருந்து விலக நேரிடும்.

2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் அம்பாரையில் மூன்று ஆசனங்களையும் மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களையும் பெற்றிருந்தது.இந்த நிலையில் மட்டக்களப்பில் சிப்லி பாறுக்கும் அம்பாரையில் ஆரீப் சம்சுதினும் முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் சென்று விட்டதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் கூடிய பலம் பெற்றுள்ளது. 

எப்படியாயினும் முஸ்லிம் கூட்டமைப்பு உறுவாக்கப்பட்டு தனித்து போட்டியிட்டால் கிழக்கு மாகாணத்தில் நான்கு உறுப்பினர்களே பெற முடியும் அதிலும் யாருடைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது வேறு விடயம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த தேர்தல் நிலவரப்படி 11 உறுப்பினர்களே இம் முறையும் தெரிவு செய்யப்படுமாயின் இன்னும் 8 உறுப்பினர்களே ஆட்சியமைக்க தேவைப்படும் அந்த உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும்.இதனால் மீண்டும் கிழக்கின் தமிழ் முஸ்லிம் கூட்டாட்சி மலரும்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here