பா.ஜ.க வினரின் அடாவடி அம்பலம் - போலீசாரை மிரட்டும் வீடியோ அம்பலம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 2, 2017

பா.ஜ.க வினரின் அடாவடி அம்பலம் - போலீசாரை மிரட்டும் வீடியோ அம்பலம்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வினரின் மிரட்டலை கண்டு சிறிதும் அஞ்சாமல் தனது பணியை சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டையும் பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த் சாகர் மாவட்டம் சயன்னா பகுதியை சேர்ந்தவர் சிரேஷ்ட தாகூர். பொலிஸ் அதிகாரியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வாகன போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் வந்த பாஜக-வை சேர்ந்த ஒருவருக்கு அபராதம் விதித்ததோடு வழக்கும் பதிவு செய்தார்.
இதனால் கைது செய்யப்பட்டவருக்கு ஆதரவாக திண்ட பாஜக-வினர் சிரேஷ்ட தாகூருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர் மீது எப்படி வழக்குப் பதிவு செய்யலாம் எனவும் கேள்வி எழுப்பினர்.
பாஜக-வினரின் இந்த செயலைக் கண்டு சிறிதும் பயப்படாத சிரேஷ்ட தாகூர், "அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்றால் முதலமைச்சர் கையெழுத்திட்ட கடிதத்தை கொண்டு வாருங்கள் என்றார்" இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வைரலாக பரவியது.

இந்நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, மாநிலம் முழுவதும் 234 அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.
அதில் சிரேஷ்ட தாகூரும் ஒருவராக உள்ளார். இதுகுறித்து பொலிஸ் அதிகாரியான சிரேஷ்ட தாகூர் கூறும்போது, "இது வழக்கமான இடமாற்றமா? அல்லது அரசியல் சம்பந்தப்பட்டதா என்பது குறித்து என்னால் பதில் சொல்ல முடியாது.
ஆனால் என்னுடைய பேட்ஜை சார்ந்த யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. எங்கள் வீட்டில் இருந்து அதிக தொலைவான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இருந்தாலும் இது என் தொழில் என்பதால் ஏற்றுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here