ஒலுவில் அல்மதீனா வித்தியாலயத்தில் ACMCன் இலவச மூக்குக்கண்ணாடி வினியோகம். - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 9, 2017

ஒலுவில் அல்மதீனா வித்தியாலயத்தில் ACMCன் இலவச மூக்குக்கண்ணாடி வினியோகம்.



ஒலுவில் அல்மதீனா வித்தியாலயத்தில் இலவச மூக்குக்கண்ணாடி வினியோகம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஒலுவில் கமு/அக்/அல்-மதீனா வித்தியாலயத்தில் இன்று (2017.07.09) ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

இதில் ஒலுவில் பிரதேசத்திலுள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண் பரிசோதனையில் கலந்து கொண்டனர். இவர்களில் 155பேருக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக வாணிப அமைச்சருமான அல்-ஹாஜ் றிசாட் பதியுத்தீனின் ஆலோசனைக்கு அமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், முன்னாள் கிழக்குமாகானசபை உறுப்பினருமான கலாநிதி ஏ.எல்.எம். ஜெமீலின் சமூகநலன் திட்டத்தின் கீழ் இவ் மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இப்பிரதேச மக்களின் கண் பரிசோதனைக்கான அழைப்பிதலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒலுவில் மத்திய குழுவினர் மேற்கொண்டதாக இணைப்பாளர் எம்.ஜே.எம். அஸ்ஹர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages