Header Ads

Breaking News

150 ஊசிகள் - அதிர்ச்சி தகவல்



ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரின் உடலில் இருந்து 150 ஊசிகள் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் உள்ள பர்தா கிராமத்தைச் சேர்ந்த பத்ரிலால் மீனா (56) என்ற ரயில்வே ஊழியரின் உடலில் இருந்து ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் கால் வலிக்காக மருத்துவரிடம் சென்ற போது, அவரது காலில் ஊசிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அறுவைசிகிச்சை மூலும் ஊசிகள் நீக்கப்பட்டன. இதையடுத்து கழுத்தில் வலி இருப்பதாக சென்ற பத்ரிலாலின் கழுத்தில், ஸ்கேன் செய்து பார்த்த போது கழுத்தில் பல்வேறு ஊசிகள் இருப்பது தெரியவந்தது.
மேலும் கை, கால் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளிலும் ஊசிகள் இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்து தான் ஊசிகளை நீக்க வேண்டும் என்று மும்பை இரயில்வே மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து கடந்த ஜுன் மாதம் 24-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பத்ரிலாலின் கழுத்துப் பகுதியில் நேற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் ஊசிகள் அனைத்தையும் அகற்றினர்.
உணவுக்குழாய், சுவாசக்குழாய் உள்ளிட்ட இடங்களில் இருந்த ஊசிகளும் நீக்கப்பட்டன. இதுகுறித்து பத்ரிலால் கூறுகையில், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டேன். ஆனால் சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. தனது உடலில் ஊசிகள் எவ்வாறு வந்தன என்பதே தெரியவில்லை என்றும் பத்ரிலால் கூறினார்.

No comments