ஓட்டமாவடி யங் லயன்ஸின் இஃப்தார்-மறைந்த அன்வருக்கு துஆப்பிரார்த்தனை (வீடியோ)
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் -
கல்குடா, ஓட்டமாவடி பிரதேசத்தில் விளையாட்டுத் துறையில் மட்டுமல்லாது அரசியல், சமூக விடயங்களிலும் பாரிய தாக்கத்தினைச் செலுத்தி வருகின்ற யங் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் நீண்ட கால முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும், இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியருமான மொஹம்மட் அன்வர் கடந்த மாதம் பொலன்னறுவையில் வைத்து தான் கடமையாற்றிய பேரூந்திலிருந்து தவறி விழுந்தலில் வபாத்துக்குள்ளாகியமை யங் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினை மட்டுமல்லாது, கல்குடா பிரதேசத்தினையே ஆழ்ந்த துயரத்துக்குள்ளாக்கிய விடயமாகப் பார்க்கப்பட்டது.
அந்த வகையில், இன்று 20.06.2017ம் திகதி ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் பாடாசலையில் அகால மரணமான அஸ்ஸஹீத் அன்வரின் ஞாபகார்த்தமாக யங் லயன்ஸ் விளையாட்டுக்கழகமானது இஃப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்து அன்வரின் ஒளிமயமான மறுமை வாழ்விற்கான துஆப் பிரார்த்தனையினையும் ஏற்பாடு செய்திருந்தது.
பிரதேசத்திலிருக்கின்ற அனைத்து கழக உறுபினர்களின் பங்குபற்றுதலோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த இஃப்தார் நிகழ்வில் அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஹாரூன் (ஸஹ்வி) மார்க்கச்சொற்பொழிவாற்றி அஸ்ஸஹீத் அன்வரிடமிருந்த நற்பண்புகளை ஞாபகமூட்டியதுடன், அவருக்காக நோன்பு திறக்கின்ற நேரத்தில் தனிப்பட்ட முறையில் துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் இஃப்தார் நிகழ்விற்காக வருகை தந்தவர்களிடம் வேண்டிக்கொண்டார்.
குறித்த இஃப்தாரின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
No comments