ஹசனலி கட்சியை பேரம் பேசியவர் - முன்னாள் தவிசாளர் ஜெபிர் மௌலவி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 23, 2017

ஹசனலி கட்சியை பேரம் பேசியவர் - முன்னாள் தவிசாளர் ஜெபிர் மௌலவி
நல்லாட்சி அரசாங்கத்தின் சில தவறுகளை அமைச்சர்  ஹக்கீம் மீதும் முஸ்லிம் காங்கிரஸ் மீதும் பழிபோடுகின்றனர். இப்போது பழி போடுகின்றவர்கள்தான் அன்று பேரம் பேசும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர் என்று இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜெபீர் மௌலவி தெரிவித்தார்.

குடிவில் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நல்லாட்சி அரசாங்கத்தை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எந்த அரசியல வாதிகளோ கட்சிகளோ தேர்ந்தெடுக்கவில்லை மாறாக மக்களே இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தார்கள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் சில தவறுகளை  முஸ்லிம் காங்கிரஸின் தலைமீது பழி போட அதாஉல்லா தரப்பு  எத்தனிக்கின்றது.

 முஸ்லிம் விரோத  மஹிந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது..இத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் எப்படியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை மக்கள்தான் கட்சித் தலைவருக்கு கூறினார்களே தவிர தலைவர்கள் அல்ல  தலைவர்கள் கருத்து தெரிவிப்பதற்கான  சந்தர்ப்பத்தை கூட  மக்கள் தலைவர்களுக்கு   வழங்கவில்லை.என்பதை யாரும் அறிவர்.

 அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் மஹிந்தவின் புதல்வர் நாமலுக்கும்   இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால்தான்   ரிஷாட் மஹிந்தவை விட்டு வெளியேறினார் என்ற உண்மையும் எல்லோருக்கும் தெரிந்தது..

 மக்களின் நிலைப்பாட்டை தமக்கு சாதகமாக பயன்படுத்திய ஹஸனலி ரணிலோடு இரகசிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார் ரவுப் ஹக்கீம் வரவில்லையென்றால் நாங்கள் உங்களோடு வந்து இணைகிறோம் என்று கூறி   தனக்கு தேவையான அரசியல் அதிகாரங்களை கோரினார்  இந் உண்மையை ஹஸனலியின் தரப்பினரே மேடைகளில் பேசுகின்றனர்.

இதற்கிடையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் உரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்தும் மஹிந்த தரப்போடு பேசி வந்தார்.பல வாக்குறுதிகள் மஹிந்தவால் வழங்கப்பட்ட போதும் அந்த வாக்குறுதிகளை உடன் அமூல் படுத்தப்பட வேண்டுமென தலைவர் ஹக்கீம் குறியாக இருந்ததனால்தான்  தபால் வாக்களிப்பு வரைக்கும் இந்த நல்லாட்சியை அவர் ஆதரிக்கவில்லை.அப்போதும் தலைவர் தபால் வாக்களிப்பின் போது ஒரு அறிக்கை விட்டிருந்தார் மக்களின் மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் என்று இதைவிட எந்த தலைவரால் இப்படி  செய்ய முடியும்?

இறுதியாக  நுாறு வீதமான மக்களே ஆட்சி மாற்றத்திற்கு தயாரான போதும் மஹிந்த வழங்கிய வாக்குறுதிகள் காலம் தாழ்த்தப்பட்டதினாலும்தான் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டது.

இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் அலட்சியத்தன்மையை விமர்சனம் செய்யும் அதாஉல்லா இதே மைத்திரியின் தலைமையில்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.மீண்டும் தனது அதிகாரத்தை பெற்றுவிட வேண்டுமென்பதற்காகத்தான் தலைவர் மாறியுள்ளார் நாங்கள் இருந்த இடத்தில் தான் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு மைத்திரியிடம்  தகுந்த கூலிகளைப் பெற்றுக் கொண்டு வருகிறார்

இந்த ஆட்சி மோசமான ஆட்சியென்றால் ஏன் அதாஉல்லா அதனோடு  ஒட்டிக் கொண்டு இருக்கிறார்.அதாஉல்லா தலைமை தாங்கும் தனிக்கட்சி இருக்குத்தானே அந்த கட்சியை அவரால் தனியாக நடாத்தி செல்ல முடியுமா? ஒரு பொதுத் தேர்தலோ அல்லது ஒரு மாகாண சபைத் தேர்தலோ அவரின் கட்சியால் தனித்து நின்று போட்டி போட முடியுமா?எதை வைத்து அவர் தேசியத் தலைவர் என்று தன்னைத் தானேபுகழ்பாடி வருகிறார்.

தேசிய காங்கிரஸ் ஒரு போதும் அக்கரைப்பற்றுக்கு வெளியில் வராது.மைத்திரியையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் நம்பித்தான் தனது எதிர்கால  பயணத்தை அது தொடரும்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages