Header Ads

Breaking News

விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு நல்ல செய்தி


பாடசாலை மாணவர்களுக்கான உத்தேச காப்புறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ்
காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் இரு வார காலத்திற்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் நோய் வாய்ப்பட்டால் அரச வைத்தியசாலை அல்லது தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்காக ஒரு இலட்சம் ரூபா வரையான காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments