நீங்களா அடுத்த தலைவர்? சிவாஜிலிங்கத்தின் பதில் இதுதான் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 23, 2017

நீங்களா அடுத்த தலைவர்? சிவாஜிலிங்கத்தின் பதில் இதுதான்



வடமாகாண அவைத்தலைவராக நான் பொறுப்பேற்க வேண்டும் என யாராவது விரும்பினால் அதற்காக என்னால் ஒன்றும் செய்ய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வடமாகாண அவைத்தலைவராக நீங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இது தொடர்பில் அவரின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது அவைத்தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் பதவி வகித்து வரும் நிலையில் புதிய அவைத்தலைவர் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி ஏன் எழுகிறது என்பது எனக்குப் புரியவில்லை என தெரிவித்தார்.
வடக்கு முதல்வருக்கெதிராக அண்மையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான விவகாரத்தில் வடமாகாண அவைத்தலைவர் நடுநிலைமை தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டுப் பலராலும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தான் வடமாகாண அவைத்தலைவர் மாற்றம் தொடர்பில் பேசப்படுகிறது எனக்கேட்ட போது,
இந்தப் பிரச்சினைகள் சமாதானமான முறையில் முடிவுக்கு வந்திருக்கிற ஒரு சூழ்நிலையில் இரண்டு தரப்பும் மறப்போம்... மன்னிப்போம்... என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages