மு.கா வை சமாளிக்க முடியாமல் திணறும் முஸ்லீம் கூட்டமைப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 22, 2017

மு.கா வை சமாளிக்க முடியாமல் திணறும் முஸ்லீம் கூட்டமைப்புசுரேஷ் ஷாத் -
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் மு.கா அதிருப்தி அணி, அ.இ.ம.க , தே.கா என்பன இணைந்து தேர்தலுக்கான கூட்டமைபற்றி சிந்தித்து வரும் அதேவேளை, மு.கா அதிருப்தி அணியை தங்களுடன் இணைத்துக் கொள்வதில் தேசிய காங்கிரஸ், ரிஷாத் கட்சியினர் தனித்தனியே ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அமைச்ர்  ரிஷாத் தொடர்பில் கடும் போக்கை கொண்டிருந்த அதாவுல்லாஹ் தற்போது வலிந்த கூட்டமைப்பு சிந்தனையை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அதேவேளை அதாவுல்லாஹ்வை ஒரு கூட்டினுள் இணைப்பதனூடாக அவரின் வாக்குவங்கி + ரிஷாத் கூட்டமைப்பு எனக்கானும் அணிக்காக குறைந்தளவு 50000  வாக்குகளை கணக்கிடுகின்றனர்.  இதன்   மூலமாக  கிழக்கின்   ஆட்சியை ஹசனலி, அதாவுல்லாஹ்  ஆகியோரில்  ஒருவரைக் கொண்டு அமைக்க திட்டம் தீட்டப்படுகிறது. 

ஹசனலி தனியே தமிழ் கூட்டமைப்பு உடனான ஒப்பந்தம் ஒன்றிற்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் ஆட்சியமைக்க மஹிந்த அல்லது மைத்திரி அணியை நாட வேண்டிய இறுதிப்படிக்குள் இது சேர்த்து விடுகிறது.

மு.கா வின் வாக்குப்பலத்தை அசைக்க அதன்தலைமை மீதான அல்லது இரண்டாம் நிலை தலைமை மீதான அவநம்பிக்கை செயல்பாடுகளை விதைத்து வரும் ஹசனலி அணியினரின் ஒட்டு மொத்த பலமும் பலயீனமான நிலைக்கு மாறிவரும் நிலையில் கேள்விக்குள் இருக்கும் இக்கட்சிகளின் ஆதரவாளர்களின் தம்பட்டம் பொதுமக்களினால் அசூசையாக பார்க்கப்படுகிறது. முகநூல் வீரர்களும், வாய்ச்சொல் வக்கிரர்களும் தமது சார்பு நிலை வசனப்பிரயோகங்கள், மற்றும் உறவு நிலை காரணமாக பெரிதும் சமூக சார்பு நிலை அற்ற தன்மையை கொண்டுள்ளது. 

அத்துடன் மு.கா வினுள் பிளவொன்றினை அல்லது நம்பிக்கை இழந்த தன்மை யொன்றினை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தங்களும் செயல்பாடுகளுக்குள் வந்துள்ளன. அந்த வகையில் அக்கரைபற்றை இலக்கு வைத்து கூட்டமைப்பு செயபடுவது தெளிவாகிறது. அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை முறுகல், அக்கரைபற்றுக்கான அதிகாரத்தை தடை செய்தல் மேலும் அக்கரைப்பற்று ஆதரவாளர்களை வேறு முகப்படுத்தல் போன்ற அரசியல் அற்ற தனிப்பட்ட தாக்குதல்களை வதந்திகளாக ஊக்குவித்து அவற்றுக்கு மு.கா வினுள் விலை போகும் தனி நபர்களை கொண்டு முலாமிடும் சதித்திட்டமாகவே அது பார்க்கப்படுகிறது. 

அம்பாறையின் போராளிகள் மிகச்சரியாக இனங்கண்டதாலேயே தவம் தலைமையிலான இப்தாருக்கு அவ்வளவு முக்கியம் கொடுத்தனர் என்பதுவும் தெளிவாகிறது. No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here