முஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா ? முஸ்லீம் தலைமைகளுக்கா ?முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  அர­சாங்கத் தரப்­பி­னரும் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் இரட்டை வேடம் போட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லோடு உரு­வாக்­கப்­பட்ட இன்­றைய அர­சாங்கம் முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் ஆட்சி பீடம் ஏறி­யது. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் 2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஆத­ரிப்­ப­தற்கு வரிந்து கட்டிக் கொண்டு நின்­றார்கள்.
ஆனால், முஸ்லிம் சமூகம் மஹிந்­த­விற்கு எதி­ரான முடி­வினை எடுத்­தது. தங்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள இன­ரீ­தி­யான அநி­யாங்­க­ளுக்கு நியா­யமும், முடிவும் கிடைக்க வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே இன்­றைய அர­சாங்கம் உரு­வா­வ­தற்கு வாக்­க­ளித்­தார்கள். இன்­றைய ஆட்­சி­யா­ளர்­களும் தேர்தல் காலத்தில் முஸ்­லிம்­களின் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு தரப்­படும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­டுப்­ப­டுத்­தப்­படும். குற்­ற­வா­ளிகள் கூண்டில் அடைக்­கப்­ப­டு­வார்கள் என்­றெல்லாம் வாக்­கு­று­தி­களை அளித்­தனர். முஸ்­லிம்­களும் நமது கஷ்­ட­மெல்லாம் நீங்கப் போகின்­ற­தென நம்­பி­னார்கள். ஆனால், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் நடை­பெற்றுக் கொண்டு தான் இருக்­கின்­றன. அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளிடம் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென்று தெரி­வித்துக் கொண்டே  இன­வாத அமைப்­புக்­க­ளுடன் தொடர்­பு­களை பேணிக் கொண்டும், பகி­ரங்­க­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட வன்­மு­றை­
ய­ாளர்­களை கைது செய்­யாதும் உள்­ளது. அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்கும், இன­வாத அமைப்­புக்­க­ளுக்கும் நல்­லவர் போல் நடித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களில் பலர் அர­சாங்­கத்தின் தாளத்­திற்கு ஏற்ப நட­ன­மாடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
இன்­றைய ஆட்சி ஏற்­ப­டு­வ­தற்கு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களும் ஒரு கார­ண­மாகும். குறிப்­பாக அளுத்­கம, பேரு­வளை, தர்கா நகர் பிர­தே­சங்­களில் 2014  ஆம்  ஆண்டு  ஜூன் மாதம்  பௌத்த இன­வா­தி­களின் வழி காட்­டல்­க­ளினால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­பவம் நாடு பூரா­கவும் உள்ள முஸ்­லிம்­க­ளிடம்  பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. தாக்­கு­த­லுடன் தொடர்­பு­களைக் கொண்­ட­வர்கள் கைது செய்­யப்­பட வேண்­டு­மென்று மஹிந்­தவின் அர­சாங்­கத்தை முஸ்­லிம்கள் கேட்டுக் கொண்ட போதிலும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. தாக்­கு­தல்­தா­ரிகள் என்று முஸ்­லிம்­க­ளினால் அடை­யாளங் காட்­டப்­பட்­ட­வர்கள் பகி­ரங்­க­மா­கவும், சுதந்­தி­ர­மா­கவும் நட­மா­டி­னார்கள். அன்­றைய ஆட்­சி­யா­ளர்கள்   இன­வாத அமைப்­புக்­களின் நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­தா­மலும் , அந்த அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களை கைது செய்­யா­மலும்  இருந்­தார்கள். அதே வேளை, அவர்­க­ளுடன் நெருக்­க­மான உற­வு­க­ளையும் கொண்­டி­ருந்­தார்கள்.
மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை  தோற்­க­டிப்­ப­துதான் முஸ்­லிம்­களின் நிம்­ம­திக்­கான ஒரே வழி என்று முஸ்­லிம்கள் முடிவு  செய்­தார்கள். இந்த முயற்­சியில் முஸ்­லிம்கள் வெற்றி பெற்­றார்கள். ஆனால், முஸ்­லிம்­களின் மீதான தாக்­கு­தல்­க­ளுக்கு அடிப்­படைக் காரணம் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை சிதை­வ­டையச் செய்­வ­தாகும். இதனை முஸ்­லிம்கள் புரிந்து கொள்­ள­வில்லை. தமது வர்த்­த­கத்தை பாது­காத்துக் கொள்­வதில் முஸ்­லிம்கள் தோல்வி கண்­டுள்­ளார்கள். இதற்­கான திட்­டங்­களை முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள், மதத் தலை­வர்கள், புத்­தி­ஜீ­விகள் வகுக்­க­வில்லை.
முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை சிதை­வ­டையச் செய்ய வேண்­டு­மென்ற திட்­டத்­துடன் செயற்­பட்ட  இன­வாத அமைப்­புக்­களை தமது அர­சியல் தேவைக்­காக மஹிந்த­ ரா­ஜ­பக் ஷ பயன்­ப­டுத்திக் கொண்டார். இந்த அமைப்­புக்­களின் உறவு அவரின் அர­சியல் தேவையை ஆரம்­பத்தில் பூர்த்தி செய்து கொடுத்­தது. இதனால் இந்த அமைப்­புக்­க­ளி­னூ­டான தொடர்­பு­களை அவர் இறுக்­க­மாக்கிக் கொண்டார். ஆனால், ஈற்றில் அவரின் தோல்­விக்கும்   இன­வாத அமைப்­புக்­களே கார­ண­மா­கவும் இருந்­தன.
முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்­தினை சிதைக்க வேண்­டு­மென்­பது இன்று நேற்று தொடங்­கப்­பட்­ட­தல்ல. மன்­னர்கள் காலத்தில் முஸ்­லிம்கள் வர்த்­த­கத்தில் கொடி கட்டிப் பறந்­தார்கள். எனவே முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை தம­தாக்கிக் கொள்­வ­தற்­காக போர்த்­து­க்கேயர், ஒல்­லாந்தர்  ஆகியோர்  முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்­திற்கு இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தி­னார்கள். 
 சுதந்­திர இலங்­கைக்கு முன்னர் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை சிதைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களை முறி­ய­டிப்­ப­தற்கு அன்­றைய முஸ்­லிம்கள் திட்­­டங்­களைத் தீட்டி செயற்­பட்­டார்கள். இதற்­கான வழி­காட்­டு­தல்­களை அன்­றைய முஸ்லிம் தலை­வர்கள் மேற்­கொண்­டார்கள். ஆனால், இன்­றைய தலை­வர்கள் முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்­தினை பாது­காத்துக் கொள்­வ­தற்­கு­ரிய திட்­டங்­களை வகுத்துக் கொள்­வ­தற்கும், அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கும் முடி­யாத நிலையில் உள்­ளார்கள். 
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்கு அளுத்­கம, பேரு­வளை, தர்­கா­நகர் முஸ்­லிம்­களின் மீது இன­வாத கும்­பல்­களின் தாக்­கு­தல்­களும் ஒரு கார­ண­மாகும் எனக் கண்டோம். இத்­தாக்­குதல் நடை­பெற்று மூன்று வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன. இத்­தாக்­கு­த­லுக்கு மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷவின் அர­சாங்­கம்தான் கார­ண­மென்று இன்று வரைக்கும் இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால், இது­வ­ரைக்கும் இத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்கள் கைது செய்­யப்­ப­ட­வில்லை. பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. 
அது மட்­டு­மல்­லாது முஸ்லிம் விரோத செயற்­பாட்­டா­ளர்­களின் மீது சட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்­பதில் கால­தா­மதத்தை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். கடும்­போக்­கு­வா­தி­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்று மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ செயற்­பட்­ட­தனை போன்றே இன்­றைய ஆட்­சி­ய­ா­ளர்­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு முகமும்,  கடும்­போக்­கு­வா­தி­க­ளுக்கு  ஒரு முகமும் காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
அளுத்­கம சம்­பவம் நடை­பெற்று மூன்று வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்ள போதிலும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்க வேண்­டு­மென்று அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுக்­கா­துள்­ள­மை­யையும் முஸ்­லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே வேளை, சிங்­கள அர­சி­யல்­வா­திகள் ஒரே வித­மான கொள்­கை­க­ளையே கொண்­டுள்­ளார்கள். கடந்த ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்­த­வர்கள் இன்று மௌன­மாக இருக்­கின்­றார்கள். 
கடந்த ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நடை­பெற்ற போது மௌன­மாக இருந்­த­வர்கள் இன்று குரல் கொடுக்­கின்­றார்கள். 
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்­தாது போனால் யுத்­தத்தை விட பாரிய விளை­வுகள் ஏற்­படும் என்று லங்கா சம­ச­மாஜ தலை­வரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான திஸ்ஸ விதா­ரண தெரி­வித்­துள்ளார்.
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட கல­கொட அத்த ஞான­சார தேரர் பொலி­ஸா­ரினால் தேடப்­ப­டு­கின்றார். இவ­ருக்கு எதி­ராக  நீதி­மன்றம் பிடி­யா­ணையும் பிறப்­பித்­துள்­ளது. இவரை அர­சாங்­கம்தான் பாது­காத்து வைத்­துள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன. இரண்டு அமைச்­சர்கள்  தமது பாது­காப்பில் ஞான­சார தேரரை வைத்­துள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன. இதே வேளை, இவரை மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷதான் பாது­காத்து வைத்­துள்ளார் என்றும் தெரி­விக்­கின்­றார்கள். இக்­குற்­றச்­சாட்­டுக்­களில் உள்ள உண்­மை­களை விளங்கிக் கொள்ள முடி­யா­துள்­ளது. ஆயினும், ஞான­சார தேரர் அதி­காரத் தரப்­பி­னரின் பாது­காப்­பில்தான் உள்ளார் என்­பது தெளி­வாகும்.
பொது­பல சேனா அமைப்­பி­னரின் அறிக்­கைகள், கருத்­துக்­களின் மூலம் அவர் எங்கே உள்ளார் என்­பது அவர்­க­ளுக்கு தெரியும். அவர் ஒரு போதும் சர­ண­டை­ய­மாட்டார் என்று பொது பல சேனாவின் பணிப்­பாளர் தெரி­வித்­துள்ளார். ஆனால், இவ்­வாறு கருத்­துக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்கும் பொது பல சேனாவின் ஆட்கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­த­வில்லை. இதன் மூல­மாக ஞான­சார தேரரின் கைது திட்­ட­மி­டப்­பட்­ட­வாறு தாம­தப்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது.
இவ்­வாறு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களின் மூல­மாக கடந்த அர­சாங்­கத்­திற்கும் இன்­றைய அர­சாங்­கத்­திற்­கு­மி­டையே எந்த வித்­தி­யா­சத்­தையும் காண முடி­யா­துள்­ளது. முஸ்­லிம்கள் அர­சாங்­கத்தை வெறுத்­தாலும் கடும்­போக்கு இன­வாத அமைப்­புக்­க­ளையும், அவற்றின் செயற்­பாட்­டா­ளர்­க­ளையும்  அர­சாங்கம் பகைத்துக் கொள்­வ­தற்கு விரும்­ப­வில்லை. கடந்த ஆட்­சியில் அமைச்­சர்­க­ளாக இருந்து முஸ்லிம் விரோத செயற்­பாட்­டா­ளர்­களை பாது­காத்­ததைப் போன்று இன்­றைய ஆட்­சி­யிலும் அவர்கள் பாது­காப்பு கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்க அநி­யாயம் நடந்து கொண்­டி­ருக்கும் நிலை­யிலும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளி­னதும், முஸ்­லிம்­க­ளி­னதும் ஆத­ரவை எதிர்­பார்ப்­பதும், அதனை அங்­கி­க­ரிக்கும் வகையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது செயற்­பா­டு­களைக் கொண்­டி­ருப்­பதும் கவ­னத்­திற்­கு­ரி­ய­தாகும்.
முஸ்­லிம்­களின் பொரு­ளா­த­ராத்­தையும், இருப்­பையும் பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மாயின் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் போக்­கு­களில் மாற்­றங்கள் ஏற்­பட வேண்டும். தலை­வர்கள் எனப்­ப­டு­ப­வர்கள் ஒழுக்­கத்தில் சிறந்­த­வர்­க­ளாக இருக்க வேண்டும். இஸ்லாம் தலை­வர்­க­ளுக்­கு­ரிய பண்­பு­களை குறிப்­பிட்­டுள்­ளது. அவற்றில் ஒழுக்­கத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுத்­துள்­ளது. முஸ்லிம் கட்­சிகள் ஒற்­று­மைப்­பட வேண்­டு­மென்று தெரி­வித்தால் நாங்கள் பெரிய கட்சி சிறிய கட்சிகளுடன் இணைய முடியாதென்று பெருமை பாராட்டுகின்றார்கள். பெரிய கட்சியாக இருந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதனைப் பெற்றுக் கொடுத்துள்ளீர்கள் என்று கேட்டால் தலையை சொறிகின்றார்கள்.
 தேசியப் பட்டியல், பிரதேசவாதம், அமைச்சர் பதவிகள், பணம், கொந்தராத்து, பொறாமை போன்ற முடிச்சுக்களினால் முஸ்லிம்களின்   அரசியல்  இறுக்கப்பட்டுள்ளது. இந்த முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டும். அஸ்ரப்பை போன்ற நெஞ்சுரம் கொண்டவர் முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். முஸ்லிம்களிடம் பல கட்சிகள் இருப்பதும், செல்வாக்குப் பெற்றுள்ள கட்சி பலவீனமடைந்து கொண்டு செல்வதும், முஸ்லிம் கட்சிகள் உள்வீட்டுப் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டிருப்பதும், அரசாங்கம் முஸ்லிம்களின் பிரச்சினைகள்  தொடர்பில் பாராமுகமாக இருந்து கொண்டிருப்பதற்கு காரணமாகும். அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இரட்டை முகங் காட்டிக் கொண்டிருப்பதனைப் போல மேற்படி குறைகளைக் கொண்டுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு முகமும், அரசாங்கத்திற்கு ஒரு முகமும் காட்டிக் கொண்டு இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Post a Comment

0 Comments