தெமட்டகொடயில் வாகனங்கள் எரிப்பு ஏன் ? போலீசார் மும்முரமான தேடல் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 22, 2017

தெமட்டகொடயில் வாகனங்கள் எரிப்பு ஏன் ? போலீசார் மும்முரமான தேடல்



கொழும்பு தெமட்டகொட பகுதியில் மூன்று வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக தெட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
தெமட்டகொட புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் முதலாவது திடீர் தீ பற்றியுள்ளது.
குறித்த காரிற்கு அருகிலிருந்த இரண்டு வாகனங்களிலும் இந்த தீ பரவியதை அடுத்து மூன்று வாகனங்களும் எரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டபோதிலும் சிறிது நேரத்தில் தணிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தெமட்டகொட பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages