Header Ads

Breaking News

சுகாதார அமைச்சை முற்றுகையிட்ட பல்கலைக்கழக மாணவர்கள்



சுகாதார அமைச்சிற்குள்  அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அத்துமீறி நுழைந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலையேற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதையடுத்து இப்பகுதியில் பெரும் எண்ணிக்கையான கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் கொழும்பு நகரமண்டபத்தையண்டிய பகுதியில் பெரும் வாகன நெரிசல் நிலவுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட மாணவ சங்கங்கள் இன்று கொழும்பில் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த சைட்டம் எதிர்ப்பு பேரணி, பொது மக்கள் மற்றும் போக்குரத்திற்கு பாதிப்பின்றி இடம்பெற வேண்டும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments