பேய்கள் வீட்டுக்கு ஆயா தேவை - அதிர்ச்சி விளம்பரம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 22, 2017

பேய்கள் வீட்டுக்கு ஆயா தேவை - அதிர்ச்சி விளம்பரம்வீட்டில் இருந்து ஆயா வேலை பார்ப்பதற்கு ஸ்கொட்லாந்தை சேர்ந்த குடும்பம் ஒன்று ஒருவரை தேடுகின்றது. ஸ்கொட்லாந்தின் எல்லையில் அமைந்துள்ள சிறிய கிராமத்தில் இவர்களது வரலாற்று சிறப்பு மிக்க வீடு அமைந்துள்ளது.
ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு பிள்ளைகளை வாரத்தில் நான்கு இரவுகள் கவனிக்க ஆயா ஒருவர் தேவைப்படுகின்றது. பெற்றோர்கள் வேலை காரணமாக அடிக்கடி வெளியே போக வேண்டிய நிலை. இதனால் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர் என vd Childcare.co.uk தெரிவித்துள்ளது.
இந்த வேலைக்கு வருடமொன்றிற்கு £50,000 (C$84,186.67), சம்பளம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயா தங்குவதற்கு ஒரு தனியறை-குளியலறை சமையல் அறை உள்ளடங்கி வழங்கப்படும். வருடமொன்றிற்கு 28-நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.
ஆனால் ஒரு சிக்கல் : வீடு பேய்கள் நடமாடுவதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குடும்பத்தினர் மற்றொரு விடயத்தையும் விளக்கியுள்ளனர்.
கடந்த வருடத்தில் ஐந்து ஆயாக்கள் வந்து சென்றுள்ளனர் எனவும் இவர்கள் சென்றதற்கான காரணம் வீட்டில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள்-விசித்திரமான குரல்கள், உடைந்த கண்ணாடிகள், தளபாடங்கள் அசைதல் போன்றன காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 10-வருடங்களிற்கு முன்னர் இவ்வீட்டை வாங்கும் போது இது ஒரு பேய் வீடென கூறப்பட்டதாகவும் இருப்பினும் தாங்கள் இதனை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் தாங்கள் எந்தவிதமான இயற்கைக்குப்புறம்பான செயற்பாடுகளை அனுபவிக்கவில்லை என குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் தாங்கள் வீட்டில் இல்லாத சமயங்களில் மட்டும் இவை நடைபெறுகின்றதென தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இந்த விளம்பரம் உண்மையானதென The Daily Telegraph உறுதிப்படுத்தியுள்ளது. வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த வித தீங்கும் ஏற்படவில்லை என குடும்பத்தினர் உறுதியளித்துள்ளனர். எனினும் ஆயா வலுவான மனநிலை கொண்டவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages