துல்லியமான முடிவுகளுடன் ரஜனி அரசியலுக்குள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 22, 2017

துல்லியமான முடிவுகளுடன் ரஜனி அரசியலுக்குள்



இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் மும்பையை கதைக்களமாகக் கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் மும்பை அடித்தட்டு மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி.
கபாலி வெற்றியை தொடர்ந்து, ரஞ்சித்தின் இயக்கத்தில் நடித்துவரக்கூடிய ரஜினி, தனது அரசியல் நுழைவுக்கான சரியான நேரத்தையும் எதிர்பார்த்தவண்ணம் உள்ளார். அதுகுறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினியை சந்தித்த வண்ணம் உள்ளனர்.படப்பிடிப்புக்கு நடுவில் மஹாராஷ்டிரா மாநில முதல்வரின் மனைவியும் ரஜினியை சந்தித்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டு ஜூலை 20-ந் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினி. அதன் பின்னர் கட்சி தொடர்பான வேளைகளில் அதிக ஆர்வம் காட்டுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்காக பறக்கும் ரஜினி அங்கு என்ன விதமான சிகிச்சைகள் மேற்கொள்கிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages