சமத்துவமே உலகம் அமைதி பெற வழி பெருநாள் செய்தியில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 24, 2017

சமத்துவமே உலகம் அமைதி பெற வழி பெருநாள் செய்தியில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம்இஸ்லாமியர்களுக்கு ரமழான்   மாதம் புனிதமானது. இம்மாதத்தில்தான் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை மேற்கொள்கின்றோம .
 பசிப்பிணியின் தன்மை பற்றி அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நோன்பு அளிக்கிறது. இதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கும், ஏழைகளுக்கு உதவுவதற்கும் உரிய கடமை வலியுறுத்தப்படுகிறது. 
இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் ஒரு சமூக அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்ட முடியும்.
நாட்டில் சிறுபான்மை இனத்தவராக உள்ள நமக்கு   உரிய பாதுகாப்பே இன்று கேள்விக்குறியாகி வருகின்றது. அண்மைக் காலமாக இடம் பெற்று வரும் இன முரண்பாடுகளை  தோற்றுவிக்கும் சம்பவங்கள் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.     
எமது  சமூகத்தின்   பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது  அரசின் கடமை   மாத்திரமல்ல,  பெரும்பான்மையான சிங்கள மக்களின்  கடமையும் ஆகும். அந்த வகையில் சமத்துவம் ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்பதில் நான் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறேன்.
 பல்வேறு இடங்களில்  தினமும்  இன்னல்களுக்கு முகம் கொடுத்து வரும் எமது முஸ்லிம் சகோதர்களின் கௌரவம், உயிர்,உடமைகளை இறைவன் பாதுகாத்து அவர்களுக்கு அமைதியை ஏற்படுத்த  வேண்டுமென இந்த புனித தினத்தில் இறைவனை பிரார்த்திக்கிறேன்
எல்லோருக்கும் எனது மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
நன்றி
உங்கள் சகோதரன்
ஏ.எல்.தவம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
இளைஞர் விவகார,தொழில் வாய்ப்பு செயலாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages