என். கே.சிவாஜிலிங்கம், ரிஷாட் பதியூதீன்,கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோருக்கு எதிராக விசாரணை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 22, 2017

என். கே.சிவாஜிலிங்கம், ரிஷாட் பதியூதீன்,கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோருக்கு எதிராக விசாரணைஇனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசப்பட்ட கருத்துகள் தொடர்பில், இதுவரையில் 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை  மா அதிபருமான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்   வடமாகாணசபை உறுப்பினர் என். கே.சிவாஜிலிங்கம், அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேரர் ஒருவரைக்  கைது செய்வதற்கும் சாதாரண பொதுமகன் ஒருவரைக் கைது செய்வதற்குமிடையில் காணப்படும்  பாரிய வித்தியாசங்கள் காரணமாகவே ஞானசார தேரரை கைது செய்வதில் இடையூறுகள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனவாத மற்றும் வெறுப்புப் பிரசாரங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்த அவர் இனவாதத்தை எவர் வெளியிட்டாலும் அவருக்கு எதிராக பாரபட்சம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் தற்போதே இதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும்  இதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages