ஈஸ்ட் டைம்ஸ் இன் கருத்து இந்திய அரசியலில் நிரூபணமாகியுள்ளது - ரஜனி பொருத்தமில்லை என்கிறார் சுப்ரமணிய சுவாமி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 25, 2017

ஈஸ்ட் டைம்ஸ் இன் கருத்து இந்திய அரசியலில் நிரூபணமாகியுள்ளது - ரஜனி பொருத்தமில்லை என்கிறார் சுப்ரமணிய சுவாமிஇலங்கையின் செய்தி இணையத்தளமான ஈஸ்ட் டைம்ஸ் இல் முதன் முதலாக நடிகர் ராஜனிகாந்த பாஜக வுடன் இணையமாட்டார் என வெளியிடப்பட்ட கருத்து சுப்ரமணிய சுவாமி மூலம் நிரூபணமாகியுள்ளது. 

 "ரஜினிகாந்த பண விவகாரத்தில் முறைகேடு செய்தவர்,அவரிடம் நேர்மை இல்லை எனவும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது"  எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஊடகங்கள் மட்டுமின்றி தேசிய ஊடகங்களிலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி விவாதிப்பதே தற்போது முக்கிய கருவாக இருக்கிறது.

 இந்நிலையில்,ஆரம்பத்திலிருந்தே ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி, சமீபத்தில் இந்தியா டுடே தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினி,சுயநலவாதி நேர்மையற்றவர்,அவர் பண விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகளை செய்துள்ளார்.அதற்கான தகுந்த ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. எனவே, அவர் அரசியலுக்கு வருவதற்கு தகுதியற்றவர். அவர் அரசியலுக்கு வரக்கூடாது என கருத்து தெரிவித்தார். 

அவர் அங்கம் வகிக்கும் பா.ஜ.க,ரஜினியை தங்கள் வளையத்திற்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில், சுப்பிரமணிய சுவாமி அவருக்கு எதிராக இப்படி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages