டயானாவை கொன்றது நானே - பிரித்தானிய உளவு அமைப்பின் முகவர் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 23, 2017

டயானாவை கொன்றது நானே - பிரித்தானிய உளவு அமைப்பின் முகவர்நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் தான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் என பிரித்தானிய உளவு அமைப்பின் முன்னாள் முகவரான ஜோன் ஹோப்கின்ஸ் (agent john hopkins) தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரணப்படுக்கையில் இருக்கும் தான் உண்மைகளை சொல்லாத வரை தனது உயிர் பிரியாது என ஜோன் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த டயானா பிரித்தானிய இளவரசர் சார்லஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
20 ஆண்டுகளுக்கு மேல் மர்மமாகவே இருக்கும் இந்த மரணம் குறித்தே ஜோன் ஹோப்கின்ஸ் தற்போது மனம் திறந்துள்ளார்.
மரணப் படுக்கையில் உள்ள அவர் டயானா மரணம் உள்பட 1973ம் ஆண்டு முதல் 1999 வரை இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 23 கொலைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
டயானா மிகவும் அழகான பெண் என்பதோடு, இளகிய மனம் படைத்தவர். ஆனால் அவர் இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்ய முடிவு செய்தது அரச குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவும் அத்துடன் டயானா அரச குடும்ப ரகசியங்கள் பலவற்றையும் தெரிந்து வைத்திருந்தார் எனவும் இதனால் அவரைக் கொல்ல வேண்டும் என பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து நேரடி உத்தரவு வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இளவரசர் பிலிப்பே இந்த உத்தரவை பிறப்பித்தார் எனவும் இதனை தான் நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் செய்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here