Header Ads

Breaking News

அமைச்சரை குரங்கு எனத்திட்டிய மலிங்க - விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு



சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் போனதால் இலங்கை அணி வீரர்களின் உடல்தகுதியை விமர்சித்து, அவர்களின் கிரிக்கெட் ஆயுள் குறித்து கேள்வி எழுப்பினார் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா.
முன்னதாக தொலைக்காட்சி ஒன்றில் மலிங்கா கூறிய போது, “நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருப்பவர்களின் விமர்சனங்கள் பற்றி கவலையில்லை.
குரங்குக்கு கிளியின் கூடு பற்றி என்ன தெரியும்? கிளியின் கூட்டுக்குள் சென்ற குரங்கு அதைப் பற்றி பேசுவது போல் உள்ளது” என்று ஜெயசேகராவுக்கு கிரிக்கெட் பற்றி என்ன தெரியும் என்ற மலிங்காவின் இந்த உருவகம் மூலம் சாட சிக்கல் எழுந்துள்ளது.
இது குறித்து ஜெயசேகரா கூறியதாவது: “நம் வீரர்களின் மோசமான உடல்தகுதியையே நாம் விமர்சித்தேன், மலிங்காவை குறிப்பிட்டு நான் எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் பொதுவெளியில் என்னை அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

No comments