உங்களுடைய இரகசியங்கள் அம்பலப்படலாம் ! உங்கள் இலத்திரனியல் கமராக்கள் தொடர்பில் அறிவித்தல் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 25, 2017

உங்களுடைய இரகசியங்கள் அம்பலப்படலாம் ! உங்கள் இலத்திரனியல் கமராக்கள் தொடர்பில் அறிவித்தல்ஒருவருடைய தனிப்பட்ட இரகசியங்கள் மட்டுமல்லாது ஒவ்வோர் தனி மனிதனும் வேவுபார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இணையம் மூலமாக ஒரு நபரின் மடிக்கணினி, கையடக்க தொலைபேசி போன்றவற்றின் கேமராக்களை பாவனையாளர்களின் அனுமதி இன்றியே அவற்றை வேறு ஒருவர் இயக்க முடியும்.
அதாவது நமக்கு தெரியாமல் நம்மை கண்காணிக்க முடியும் இதன் மூலம் அந்தரங்க விடயங்கள் மட்டுமல்லாது தனிப்பட்ட இரகசியங்களும் கசிந்து விடும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இணையம் பாவனை செய்பவர்கள், ஸ்மார்ட் தொலைபேசிகளை உபயோகிப்பவர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விடயம் குறித்து மேலைத்தேய நாடுகளில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. உதாரணமான சமூக வலைத்தளங்களில் முன்னிலை வகிக்கும் பேஸ்புக் உரிமையாளர் மார்க் சக்கர்பேர்க் கூட அவதானமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
அவர் பாவிக்கும் மடிக்கணினியின் கேமராவையும், மைக்கையும் மறைத்து வைத்தே பாவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ஸ்மார்ட் தொலைபேசிகளில் முன்பக்க கேமராவும் கூட வேறு ஒரு இடத்தில் இருந்து பாவனையாளரின் அனுமதி இன்றி இயக்கி புகைப்படங்களை எடுக்கவும், காணொளியாக பதிவு செய்து கொள்ளவும் முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவ்வாறான சாதனங்களை பயன்படுத்துகின்றவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை அறிந்த பலர் தற்போது கேமராக்களை மறைத்தே பாவித்து வருவதாகவும் கேமராக்களை மறைப்பதற்காக ஸ்டிக்கர்கள் உட்பட பல வகையான பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஓர் உளவு நடவடிக்கைகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஹேக்கிங் நடவடிக்கையாகவே காணப்படுகின்றது. ஆனாலும் தற்போது ஹேக்கர்கள் இதனை இலகுவாக செய்து விடுகின்றனர்.
எனவே ஒவ்வோர் நபரும் இந்த விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது மிகவும் அபாயகரமான விடயம் எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages