விசாரணையை கண்டு கதி கலங்கும் விக்னேஸ்வரன் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 23, 2017

விசாரணையை கண்டு கதி கலங்கும் விக்னேஸ்வரன்



வடக்கு மாகாண சபை­யின் நீதிக்­கான அணி­யின் கோரிக்­கையை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நிரா­க­ரித்­தார்.
முத­ல­மைச்­ச­ரின் அமைச்சு உட்­பட 5 அமைச்­சுக்­கள் மீதும் சட்­ட­பூர்­வ­மான – சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்று நீதிக்­கான அணி வலி­யு­றுத்­தி­யி­ருந்த நிலை­யில், இரு அமைச்­சுக்­கள் மீதே விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று உறுதியாகத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வு முடிவடைந்த பின்னர் பத்திரிகையாளர்கள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இடைமறித்துக் கேள்வி எழுப்பினர். ‘வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீது மீண்டும் விசாரணை நடத்தப்படுமா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு முதலமைச்சர், “வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்த புதிய விசாரணைக் குழு விரைவில் அமைக்கவுள்ளேன். அவர்கள் இந்த இரு அமைச்சுக்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணை நடத்துவார்கள்” என்று பதிலளித்தார்.
வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்பித்திருந்த வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணி, வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு உள்பட 5 அமைச்சுக்கள் மீது சுயாதீனமான, சட்டரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages