முஸ்லிம் காங்கிரசின் முக்கிய மூவர்களின் குடும்ப உறவுக்கான கபூர் அவர்களின் தந்தை கே.எம். சீனி முகம்மது ஹாஜியார். (ஹரீஸ், ஜவாத், ஆரிப்) - தந்தையர் தின விசேடம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 20, 2017

முஸ்லிம் காங்கிரசின் முக்கிய மூவர்களின் குடும்ப உறவுக்கான கபூர் அவர்களின் தந்தை கே.எம். சீனி முகம்மது ஹாஜியார். (ஹரீஸ், ஜவாத், ஆரிப்) - தந்தையர் தின விசேடம்


முஸ்லிம் காங்கிரசின் முக்கிய மூவர்களின் குடும்ப உறவுக்கான கபூர் அவர்களின் தந்தை கே.எம். சீனி முகம்மது ஹாஜியார். (ஹரீஸ், ஜவாத், ஆரிப்)
நான்,சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களின் இல்லத்திற்கு சென்றேன். அங்குஅவரின் பழைய புகைப்படபூங்காகாவைப் பார்த்தேன். அதற்குள் அன்னாரின் தந்தையினுடைய படம் ஒன்று மிகவும் பளிச்சென்று என் கண்களில்பட்டது. அதனைப் பார்த்தவுடன் இந்த புகைப்படத்தினை வைத்து இவரை இன்றைய நாட்களில் பலராலும் ஞாபகப் படுத்தப்பட்டு வரும் தந்தையர் தினத்தில் இவர் பற்றி நான் இதுவரை அறிந்த பல தகவல்களுடன் அவரின் புத்திரர் சட்டத்தரணி கபூர் அவர்களிடம் இருந்தும் தனது தந்தை பற்றிய மேலதிக ஒரு சில பழைய குறிப்புக்களையும் கேட்டு அறிந்து கொண்டேன்.
நமது நாட்டில் வெளிவரும் தினகரன்,வீரகேசரி முறையே 15 சதமாகவும் தினபதி 10 சதமாகவும் சிந்தாமணி 20 சதமாகவும் விற்பனை செய்யப்பட்ட ஒரு காலத்தில் இப்பத்திரிகை நிறுவனங்களின் முகவராக அட்டாளைச்சேனை பாலமுனை ஒலுவில் போன்ற பிரதேசங்களுக்கான ஏகபோக ஏஜன்டாகவும் அவர் அக்கம்பணியால் நியமிக்கப்பட்டிருந்தார். இதன் முலம் இப்பகுதியில் பத்திரிகை வாசிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் வழக்கமாக்கப்பட்டது என்பது வரலாறு.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பிரபல்யமான வர்த்தகராக இருந்து விழங்கி மறைந்த இவர்; அந்நாட்களில் அரிசி / நெல் வியாபாரத்தில் கல்முனையைச் சேர்ந்த மறைந்த பெரியதம்பி முதலாளி என அழைக்கப்படும் ஹபீப் முகம்மது (இப்போதைய விளையாட்டுத் துறை பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ எச்.எம்.ஹரீஸ் அவர்களின் தந்தை) யுடன் இணைந்து இப்பகுதியில் அவ்வியாபாரத்தை செய்து வந்தார்.
அத்துடன் அக் காலங்களில் பெற்றோல்,டீசல், மண்ணெண்ணை, ஒயில் போன்றவைகளை விற்பனை செய்யும் வெளிநாட்டு “கல்டெக்ஸ்” கம்பனியின் முகவராக (ஏஜென்டாக) இவ்வுரில் முதன் முதலாக அவ் வியாபாரத்தை அறிமுகம் செய்தவர். அப்போது கல்முனை அலி உதுமாலெப்பை (இன்றைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் அவர்களின் தந்தையின் தகப்பனார்) இவருடன் இணைந்து இப்பகுதியில் இவ் வியாபாரத்தை மிகவும் வெற்றிகரமாக அன்று செய்து வந்தார்கள்.
இலங்கைக்கு ஜப்பான் வாகனங்கள் வருவதற்கு முன்பு அந்நாட்களில் தனது தனிப்பட்ட பாவனைக்காக 1960/65 – 1970/75 ஆண்டுகளில் இப்பகுதியில் “ஹில்மன்” “சிங்கர்”ஒக்ஸ்வோட்” ”கேம்ரீட்ஜ்” போன்ற பல வாகனங்களை சொந்தமாக வைத்து பயன்படுத்தி வாழ்ந்து வந்த இவர் தான் மறைந்த அல்-ஹாஜ் கே. எம். சீனிமுகம்மது (கே.எம் முதலாளி) என அந்நாட்களில் பலராலும் பரவலாக அழைக்கப்பட்டு வந்தவரின் புதல்வர் தான் நமது முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபகப் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள்.
இவர் கல்முனை முன்னாள் பட்டின சபைத் தலைவரும், கல்முனை வர்த்தக சங்கத் தலைவருமாக இருந்து மறைந்த கே.கே.எம். குழந்தை மரைக்காரின் சம்மந்தியின் மகன்தான் சட்டத்தரணி கபூர் என்பதும் மற்றுமொரு குறிப்பாகும். இவர் கிழக்கு மாகாணசபை தற்போதைய உறுப்பினர் கே.எம்.ஜவாத் அவர்களின் சொந்த மைத்துனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. முஸ்லிம் காக்கிரஸ் தலைவர் மறைந்த அஸ்ரப் அவர்களின் வாகனத் தொடரணியாக வீதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவ்வாகத் தொடரணி நின்றவுடன். அவ்வாகனத்திலிருந்து அஸ்ரப் அவர்கள் இறங்கி வந்து அவரின் கடைக்கு முன் நிற்றுக்கொண்டிருந்த சீனி முகம்மது முதலாளியிடம் சலாம் சொல்லி சுகம் விசாரித்து விட்டு தனது பயணத்தைத் மீண்டும் தொடர்ந்தார்.
இந்த ஆச்சரியமான நிகழ்வுக்கு இன்றும் நான் சாட்சி அல்ஹம்துலில்லாஹ் இப்படியான கபூரின் தந்தையை இன்றைய தந்தையர் தினத்தில் தன்னை 1960களில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி கற்க அந்நாட்களில் வாய்ப்பளித்த வாப்பாவை நன்றியுடன் நினைவு கூரும் அவருடன் நாங்களும் இணைந்து அவரை இந் நன்நாளில் நிட்சயமாக நினைவூட்டுவதுடன். அவரின் மறுமை நல்வாழ்வுக்காக பிராத்திக்கின்றோம்.
நன்றி; அரூஸ் சம்சுதீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages