நாமல் 2020 இல் ஜனாதிபதி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக வருவதை விரும்பினாலும் அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க வேண்டியதில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி, பாத்தமும்பர பிரதேசத்தில் நடந்த வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் பதவிக்கு வந்தால், நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்பதால், முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முயற்சிக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நடத்தும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி தனது மகனின் அரசியல் எதிர்காலத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments