About Me

header ads

தேசியப்பட்டியல் குள்ள நரியால் சர்ச்சை - ரவி காட்டம்



பிரதமரை காப்பற்றுவதாக கூறி, கட்சியினுள் தேசியப்பட்டியல் மூலமாக நுழைந்த அமைச்சர் ஒருவரின் குள்ளத்தனத்தின் காரணமாகவே கட்சியினுள் பல சிக்கல்கள் இன்று தோன்றியுள்ளன  என வெளிவிவகார அமைச்சர் ரவி கருனானயக்கே தெரிவித்துள்ளார்.

அத்துடன்மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாது, மக்களை விட்டும் தூரப்பட்ட, தேசியப்பட்டியல் மூலமாக உள்ளே நுழைந்த நரித்தனமான அமைச்சர் ஒருவர் கூடுதல் அளவு துள்ளுகிறார். அவரது நடவடிக்கைகள் வெகு விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

அமைச்சு மாற்றத்துக்கு கட்சிக்குள் உள்ள ஒருவர் காரணம் என ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது குறித்த நபர் மீதான சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments